இந்து சமய தத்துவ விசாரணை மைய மாநாடு

சிவச்சுடர் ஆன்மிக மாத இதழின் 9-ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, இந்து சமய தத்துவ விசாரணை மையம்

சிவச்சுடர் ஆன்மிக மாத இதழின் 9-ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, இந்து சமய தத்துவ விசாரணை மையம் சார்பில், சனி மற்றும் ஞாயிறு ஆகிய இரண்டு நாள்கள் மயிலாடுதுறையில் ஐந்தாவது மாநாடு நடைபெற்றது.
சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், தருமை ஆதீன கலைக்கல்லூரி துணை பேராசிரியர்
உ. வினோத் வரவேற்றார். நிகழ்ச்சியை, சு.தட்சிணாமூர்த்தி ஒருங்கிணைத்தார். முனைவர் தி.பாலசுப்பிரமணியன், "வெள்ளாளனைச் சருக்கம்' என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்.
தொடர்ந்து, தருமை ஆதீன கலைக்கல்லூரி தமிழ்த்துறைத் தலைவர் க.சேகர் எழுதிய "திருமுறையும், திருநெறியும்' என்ற நூலை தருமை ஆதீன கலைக்கல்லூரி இயற்பியல் துறைத் தலைவர் பா.செந்தில்குமார், "சங்கநெறி' என்ற நூலை, நல்லாசிரியர் இரா.செல்வகுமார் ஆகியோர் வெளியிட்டனர். 
பேராசிரியர் இரா.சம்பந்த மூர்த்தி, புலவர் சோ.இராசமாணிக்கம் ஆகியோர் நூல் மதிப்புரை செய்து பேசினர். புலவர் கு.ரேவதி பாலகிருஷ்ணன் "கோதில் குணத்துப் பரவையார்' என்ற தலைப்பிலும், பூம்புகார் கல்லூரி முன்னாள் தமிழ்த்துறைத் தலைவர் த.அகரமுதல்வன் "வினைதீர்க்கும் வெண்காடு' என்ற தலைப்பிலும் உரையாற்றினர். புலவர் நா.திருஞானசம்பந்தம் நிறைவுரை ஆற்றினார்.
ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்வின் முதல் அமர்வுக்கு, ஓய்வுபெற்ற வட்டார வளர்ச்சி அலுவலர் இராம.விஸ்வநாதன் முன்னிலை வகித்தார்.
இதில், மதுரை பொன்.முத்துக்குமரன் ஓதுவார், குமாரவயலூர் திருஞான.பாலசந்தர் ஓதுவார், மயிலாடுதுறை சொ.சிவக்குமார் ஓதுவார், கரிவலம்வந்தநல்லூர் முருக.சுந்தர் ஓதுவார், சிதம்பரம் ஆலவாய்அண்ணல் தேவாரப் பாடசாலை மாணவர்கள் ஆகியோர் இன்னிசையுடன் ஒன்பதாம் திருமுறை முற்றோதல் பாடினர். தொடர்ந்து, பொன்.முத்துக்குமரன் ஓதுவாரின், திருமுறைப் பணிகளைப் பாராட்டி "திருமுறை இசைச் செம்மல்' என்ற விருது வழங்கப்பட்டது.
இரண்டாம் அமர்வில், தமிழாசிரியர் வீதி.முத்துக்கணியன் வரவேற்றார். ரவி முன்னிலை வகித்தார். தருமை ஆதீனப் புலவர் மு.சிவச்சந்திரன் "என் சொல்லி வாழ்த்துவேன் யான்' என்ற தலைப்பிலும், முனைவர் சி.சிவசங்கரன் "சேக்கிழாரின் சமுதாய சிந்தனைகள்' என்ற தலைப்பிலும், கோமல் கா.சேகர் "குற்றம் ஒன்றும் செய்ததில்லை' என்ற தலைப்பிலும் சிறப்புரை ஆற்றினர். 
இதில், முனைவர் இல.முத்துக்குமரசாமியின் ஆன்மிகப் பணிகளைப் பாராட்டி "இருநெறி இறைநெறிச் செம்மல்' என்ற விருது வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், பொறியாளர் வே.ரெங்கராஜ், சாமி.கிருட்டிணமூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்று பேசினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com