என்.எஸ்.எஸ். சிறப்பு முகாமில் இலக்கியச் சொற்பொழிவு

திருக்குவளை அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியின் ஒரு வார கால நாட்டு நலப் பணித்

திருக்குவளை அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியின் ஒரு வார கால நாட்டு நலப் பணித் திட்ட சிறப்பு முகாமின் நான்காம் நாளான வியாழக்கிழமை களப்பணி மற்றும் இலக்கியச் சொற்பொழிவு நடைபெற்றன.
களப் பணியாக கோயில்கன்றாப்பூர் கோயிலில் உழவாரப்பணி நடைபெற்றது. தொடர்ந்து மாலையில் இலக்கியச் சிறப்பு சொற்பொழிவு நடைபெற்றது. நாட்டுநலப்பணித் திட்ட மாணவி எ. ஐஸ்வர்யா வரவேற்றார். கல்லூரியின் முதல்வர் எம். துரைராசன் முன்னிலை வகித்தார். 
சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்ற திருக்குவளை பொறியியல்  கல்லூரியின் வேதியியல் துறைத் தலைவர் எ. கலைச்செல்வன் "இயற்கை உணவின் நன்மைகள்' என்ற தலைப்பிலும், கணிப்பொறியியல் துறைத் தலைவர் எஸ். ஸ்ரீதரன் "முன்னேற்றத்திற்கான வழி, நேர மேலாண்மை' என்ற தலைப்பிலும் உரையாற்றினர்.
திருக்குவளை அண்ணா பல்கலைக்கழகப் பொறியியல் கல்லூரியின் கட்டடவியல் துறை பேராசிரியர் எ.தெய்வீகன் "எண்ணம், சொல், செயல்' என்ற தலைப்பில் பேசினார். தொடர்ந்து,  சிறப்பு நிகழ்ச்சியாக, திருக்குறளின் 1,330 குறளையும் ஒப்பித்து "குரல் மணி'  பட்டம் பெற்ற 2-ஆம் வகுப்பு மாணவி எஸ். விகாஷினி பங்கேற்று, சிறப்பு விருந்தினர்கள் கேட்கும் குறள்களை  விளக்கத்துடன் தெளிவாகக் கூறி அனைவரது பாராட்டையும் பெற்றார். இவருக்கு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது. பின்னர், என்.எஸ். எஸ். மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மாணவி எ. அனுஷா நன்றி கூறினார்.
இந்நிகழ்ச்சிகளை நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் எஸ். கணேஷ்குமார், தன்னார்வலர்கள் டி. வைஷ்ணவி, எஸ். பிரியதர்ஷினி  ஆகியோர் தொகுத்தளித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com