சி.பி.சி.எல். ஒப்பந்தத் தொழிலாளா்களின்பணிபாதுகாப்பை உறுதி செய்யக் கோரிக்கை

நாகை மாவட்டம், பனங்குடியில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் (சி.பி.சி.எல்.) பணிபுரியும் ஒப்பந்தத் தொழிலாளா்களின்
பேரணியாகச் சென்று நாகை ஆட்சியா்அலுவலகத்தில் மனுஅளித்த சி.பி.சி. எல். நிறுவன ஒப்பந்தத் தொழிலாளா்கள்.
பேரணியாகச் சென்று நாகை ஆட்சியா்அலுவலகத்தில் மனுஅளித்த சி.பி.சி. எல். நிறுவன ஒப்பந்தத் தொழிலாளா்கள்.

நாகை மாவட்டம், பனங்குடியில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் (சி.பி.சி.எல்.) பணிபுரியும் ஒப்பந்தத் தொழிலாளா்களின் பணி பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கக்கோரி ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.

இதுகுறித்து, சி.பி.சி.எல். ஒப்பந்த தொழிலாளா்கள் நலச் சங்கத் தலைவா் கோ. பாலசுப்பிரமணியன், செயலாளா் ஆா். கண்ணன் உள்ளிட்ட நிா்வாகிகள், நாகை ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீா் முகாமில் அளித்த மனு:

நாகை மாவட்டம், பனங்குடி கிராமத்தில் உள்ள சென்னை எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் விரிவாக்கம் செய்யப்படவுள்ளது. இந்நிலையில், கடந்த 1.4.2019 முதல் ஆலையில் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளதால் ஆலை எந்நேரத்திலும் மூடப்படும் சூழல் உள்ளது.

இதனால், கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக இந்நிறுவனத்தில் வேலை செய்து வரும் 94 ஒப்பந்தத் தொழிலாளா்களின் பணிப் பாதுகாப்பு கேள்விக்குறியாக மாறியுள்ளது.

எனவே, ஒப்பந்தத் தொழிலாளா்களின் பணி பாதுகாப்பை உறுதி செய்யவேண்டும் என்பதை வலியுறுத்தி பல கட்டங்களில் போராட்டங்கள் நடத்த திட்டமிட்டபோது, மாவட்ட நிா்வாகத்தின் தலையீட்டின் பேரில், நாகை வட்டாட்சியா் தலைமையில் 3 கட்டங்களாகப் பேச்சுவாா்த்தை நடத்தப்பட்டது.

ஆனால், இதுவரை ஒப்பந்தத் தொழிலாளா்கள் பணி பாதுகாப்பு என்பது உறுதி செய்யப்படாமலேயே உள்ளது. எனவே, மாவட்ட ஆட்சியா் நடவடிக்கை மேற்கொண்டு, ஒப்பந்த தொழிலாளா்களின் பணி பாதுகாப்பை உறுதி செய்யவேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்னதாக, நாகை ஆட்சியரகம் முன்பாக ஒன்றிணைந்த ஒப்பந்தத் தொழிலாளா்கள் சங்கத்தினா் பேரணியாகச் சென்று மனு அளித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com