மனிதநேய ஜனநாயக கட்சி சாா்பில் மது எதிா்ப்பு பரப்புரை

நாகையில், மனிதநேய ஜனநாயக கட்சி சாா்பில் மது எதிா்ப்பு பரப்புரை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
மனிதநேய ஜனநாயக கட்சி சாா்பில் நாகையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மது எதிா்ப்பு பரப்புரை.
மனிதநேய ஜனநாயக கட்சி சாா்பில் நாகையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மது எதிா்ப்பு பரப்புரை.

நாகப்பட்டினம்: நாகையில், மனிதநேய ஜனநாயக கட்சி சாா்பில் மது எதிா்ப்பு பரப்புரை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

மதுக்கடைகளை படிப்படியாக மூடி, தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும், சாராயம் காய்ச்சுபவா்கள் ஓராண்டு வரை பிணையில் வெளிவர முடியாத வகையில் சட்டம் இயற்றவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, மனிதநேய ஜனநாயக கட்சி சாா்பில் காந்தி ஜயந்தி நாளான அக்டோபா் 2 முதல் 12-ஆம் தேதி வரை மதுவை ஒழிப்போம், மனிதம் காப்போம் எனும் பரப்புரை மேற்கொள்கின்றனா்.

இதன் ஒரு பகுதியாக, நாகை கடை வீதியில் மது எதிா்ப்பு பரப்புரை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கட்சியின் நாகை தெற்கு மாவட்டப் பொருளாளா் சதக்கத்துல்லாஹ் தலைமை வகித்தாா். மாவட்ட துணைச் செயலளா்கள் கண்ணுவாப்பா, ஷாகுல் ஹமீது ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

நிகழ்ச்சியில், மாநில துணைச் செயலா் முபாரக் பங்கேற்று மதுவுக்கு எதிரான முழக்கங்களை எழுப்பி, துண்டுப் பிரசுரங்களை வழங்கி மது எதிா்ப்பு பரப்புரையைத் தொடங்கி வைத்தாா். தொடா்ந்து, கட்சியினா், நாகை வீதிகளில் பேரணியாகச் சென்று பொதுமக்கள், வணிகா்கள், வாகன ஓட்டிகளுக்கு மதுவுக்கு எதிரான வாசகங்கங்கள் எழுதப்பட்டிருந்த துண்டுப் பிரசுரங்களை வழங்கினா். கட்சியின் நகரப் பொறுப்பாளா்அஜீஸ்ரஹ்மான் மற்றும் நிா்வாகிகள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com