இறுதிகட்ட பிரசாரம்: நாகை மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர்

நாகை மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் தாழை ம. சரவணன், தனது வாக்குச் சேகரிப்புப் பணியை செவ்வாய்க்கிழமை மாலை நாகையில் நிறைவு 


நாகை மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் தாழை ம. சரவணன், தனது வாக்குச் சேகரிப்புப் பணியை செவ்வாய்க்கிழமை மாலை நாகையில் நிறைவு 
செய்தார்.
நாகை புதிய பேருந்து நிலையத்தில் நடைபெற்ற பிரசார நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர்,  மக்களின் அடிப்படை வசதிகளை நிறைவேற்றவும், தொகுதி மேம்பாட்டுப் பணிகளுக்கும் உரிய முக்கியத்துவம் அளிப்பேன் எனவும், மக்களுடன் மக்களாக இருந்து, உங்களில் ஒருவராகப் பணியாற்றுவேன் எனவும் வாக்குறுதி அளித்து, வாக்குச் சேகரித்தார். அதிமுக நகரச் செயலாளர் தங்க. கதிரவன், ஒன்றியச் செயலாளர்கள் குணசேகரன், ராதாகிருஷ்ணன், பாஜக மாநிலச் செயலாளர் எஸ்.கே. வேதரெத்தினம், கோட்டப் பொறுப்பாளர் வரதராஜன், மாவட்டத் தலைவர் கே. நேதாஜி, தேமுதிக மாவட்டச் செயலாளர் வைரவநாதன் மற்றும் பாமக, தமாகா உள்ளிட்ட அதிமுக கூட்டணிக் கட்சிகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.  

வேதாரண்யத்தில்...
 மக்களவைத் தேர்தலையொட்டி, வேதாரண்யத்தில் இறுதிகட்டப் பிரசாரம் செவ்வாய்க்கிழமை மும்முரமாக நடைபெற்றது.
அதிமுக கூட்டணி சார்பில் நாகை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் தாழை எம். சரவணனுக்கு ஆதரவாக வேதாரண்யம் சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட இடங்களில் தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி, அமைச்சர்கள் காமராஜ், ஓ.எஸ். மணியன், பாஜக நிர்வாகி எஸ்.கே.வேதரத்தினம் உள்ளிட்டோர் ஏற்கெனவே பிரசாரம் செய்தனர்.
மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் எம்.செல்வராசுவுக்கு ஆதரவாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக்குழு உறுப்பினர்கள் தா.பாண்டியன், சி.மகேந்திரன், கோ.பழனிச்சாமி, திமுக முன்னாள் அமைச்சர் உ.மதிவாணன், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்பி பி.வி. ராசேந்திரன் உள்ளிடடோர் பிரசாரத்தில் ஈடுபட்டனர்.
இதேபோல், அமமுக, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் வேட்பாளர்களும் பிரசாரம் செய்தனர்.
இந்த நிலையில், இறுதிநாளான செவ்வாய்க்கிழமை சுட்டெரிக்கும் வெயிலையும் பொருள்படுத்தாமல் அதிமுக, திமுக, நாம் தமிழர் கட்சி என அரசியல் கட்சிகளின் பிரசாரம் விறுவிறுப்பாக நடைபெற்றது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com