சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு
By DIN | Published On : 18th April 2019 09:22 AM | Last Updated : 18th April 2019 09:22 AM | அ+அ அ- |

திருக்குவளை மற்றும் அதைச் சுற்றியுள்ள சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு புதன்கிழமை நடைபெற்றது.
பிரதோஷத்தையொட்டி, கீழ்வேளூர் அருகே உள்ள தேவூர் தேன்மொழியாள் உடனுறை தேவபுரீசுவரர் கோயில், தேவூர்அருகே உள்ள ஆவராணி புதுச்சேரி நடராஜர் கோயில், வலிவலம் இருதய கமல நாதசுவாமி கோயில், திருக்குவளை தருமையாதீனத்துக்குச் சொந்தமான தியாகராஜசுவாமி கோயிலிலும், நந்தியம்பெருமானுக்கு பால், தேன், தயிர், சந்தனம், பன்னீர், திருநீறு மற்றும் பஞ்சாமிர்தத்தால் அபிஷேகம் நடைபெற்றது.
பின்னர் வில்வம், அரளி, தாமரை, மல்லிகை மலர்களால் அர்ச்சனை செய்து தீபாராதனை காட்டப்பட்டது. இதில், திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.