தேசிய திறனாய்வுப் போட்டித் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்குப் பாராட்டு
By DIN | Published On : 26th April 2019 05:23 AM | Last Updated : 26th April 2019 05:23 AM | அ+அ அ- |

தேசிய திறனாய்வுப் போட்டித் தேர்வில் வெற்றி பெற்ற மாணவிகளுக்குப் பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.
பள்ளி மாணவர்களுக்கு தேசிய அளவிலான திறனாய்வுப் போட்டித் தேர்வு அண்மையில் நடைபெற்றது. இதில், நாகை மாவட்ட அளவில் மயிலாடுதுறையில் நடைபெற்ற தேர்வில், திட்டச்சேரி அரசு உயர் நிலைப் பள்ளி மாணவிகள் மு. ரஸ்மினா தஸ்னீம், ஆ. லைலத்துல் பாஹிமா, கு. நித்யா ஆகியோர் தேர்ச்சிப் பெற்றனர். இவர்களுக்கு, அரசின் உதவித் தொகையாக மாதந்தோறும் தலா ரூ.1,000 வீதம் 4 ஆண்டுகளுக்கு வழங்கப்படும். இம்மாணவிகளை பள்ளியின் தலைமை ஆசிரியர் மலர்விழி மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர்- ஆசிரியர் சங்க நிர்வாகிகள், கல்விக்குழு உறுப்பினர்கள், பள்ளி வளர்ச்சிக் குழு உறுப்பினர்கள் பாராட்டினர்.
நாங்கூர் அரசுப் பள்ளி மாணவிகள்...
பூம்புகார், ஏப். 25: தேசிய திறனாய்வுப் போட்டித் தேர்வில் நாங்கூர் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவிகளும் வெற்றி பெற்றனர்.
இப்போட்டித் தேர்வில் பங்கேற்ற நாங்கூர் அரசு மேல்நிலைப் பள்ளி எட்டாம் வகுப்பு மாணவிகள் ஜெயபிரியா, தென்னரசி ஆகியோர் வெற்றி பெற்றனர். இவர்களை பள்ளி தலைமையாசிரியர் குமார், துணை தலைமையாசிரியை கனிமொழி, ஆசிரியர்கள் சிவக்குமார், அம்பேத், முருகவேல் ஆகியோர் பாராட்டினர்.