அரசுப் பள்ளியில் ஆய்வு
By DIN | Published On : 04th August 2019 01:09 AM | Last Updated : 04th August 2019 01:09 AM | அ+அ அ- |

திருமருகல் ஒன்றியம், காரையூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனர்.
இப்பள்ளியில், கடந்த 2005- 06-ஆம் ஆண்டில் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் ரூ.3.30 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட வகுப்பறைகள் தற்போது சேதமடைந்து இருப்பதை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் க.அன்பரசு,ஜி.ஆர்.இளங்கோவன் ஆகியோர் ஆய்வு செய்தனர். பின்னர், அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் தனலெட்சுமியிடம் உடனடியாக செட் அமைத்து தரப்படும் என உறுதியளித்த அவர்கள், பழுதடைந்த கட்டடத்தை இடித்துவிட்டு புதிய கட்டடம் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.