கண் பரிசோதனை முகாம்
By DIN | Published On : 04th August 2019 01:05 AM | Last Updated : 04th August 2019 01:05 AM | அ+அ அ- |

சிவசேனை கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே பிறந்த நாளை முன்னிட்டு, திருமருகலில் கண் பரிசோதனை முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
சிவசேனை, வீர ஹிந்து தமிழர் பேரவை, நியூ நைஸ் வித்யாலயா திருப்பூண்டி, எஸ்.பி.எம். தொண்டு நிறுவனம், நாகை மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் மற்றும் புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனை ஆகியவை சார்பில் நடைபெற்ற இம்முகாமில், கண்புரை, சர்க்கரை நோய், கண்நீர் அழுத்த நோய், குழந்தைகளின் கண் நோய் குறித்து பரிசோதனை செய்து இலவச மூக்கு கண்ணாடிகள் வழங்கப்பட்டன. இதில் 150-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
இந்நிகழ்ச்சிக்கு சிவசேனை மாவட்ட தலைவர் சுந்தரவடிவேலன் தலைமை வகித்தார். திருப்பூண்டி நியூ நைஸ் வித்யாலயா பள்ளியின் தாளாளர் மருத.வீரமணி, அரிமா சங்க மாவட்டத் தலைவர் காத்தையன், தொழிலதிபர் ராஜகோபாலன், தொண்டு நிறுவன நிர்வாகி சுரேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் சிவசேனை மாவட்ட துணைத் தலைவர் நாராயணமூர்த்தி, மருத்துவர்கள் சுபாஷினி, ருக்ஷனா, அரவிந்த் கண் மருத்துவமனையின் ஒருங்கிணைப்பாளர் பரமசிவம் பிரதீப் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.