பாலியல் வன்கொடுமை தடுப்பு விழிப்புணர்வுப் பேரணி

பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் தடுப்பு விழிப்புணர்வுப் பேரணி நாகையில் சனிக்கிழமை நடைபெற்றது.

பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் தடுப்பு விழிப்புணர்வுப் பேரணி நாகையில் சனிக்கிழமை நடைபெற்றது.
பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளைத் தடுப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், நாகை மாவட்டக் காவல் துறை சார்பில் இந்தப் பேரணி நடைபெற்றது.  நாகை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் டி.கே. ராஜசேகரன் தலைமை வகித்து, கொடி அசைத்து பேரணியைத் தொடங்கி வைத்தார். மதுவிலக்குப் பிரிவு காவல் துணைக் கண்காணிப்பாளர் சாமிநாதன் மற்றும் காவல் ஆய்வாளர்கள், சார்பு ஆய்வாளர்கள் கலந்துகொண்டனர்.
பள்ளி, கல்லூரி மாணவிகள் 150-க்கும் அதிகமானோர் பேரணியில் பங்கேற்று, குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்குக் கடுமையான தண்டனையை உறுதி செய்ய வேண்டும், பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்க வேண்டும் என்ற முழக்கங்களை எழுப்பிச் சென்றனர். நாகை அவுரித் திடலிலிருந்து தொடங்கிய இந்தப் பேரணி, நகரின் முக்கிய வீதிகள் வழியே சென்று நாகை சார் ஆட்சியர் அலுவலகம் முன்பாக நிறைவடைந்தது.     

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com