பேரிடர் மேலாண்மை ஒத்திகை நிகழ்ச்சி

நாகை மாவட்டம், பூம்புகார் அருகே உள்ள வானகிரி மீனவ கிராமத்தில் பேரிடர் மேலாண்மை ஒத்திகை நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

நாகை மாவட்டம், பூம்புகார் அருகே உள்ள வானகிரி மீனவ கிராமத்தில் பேரிடர் மேலாண்மை ஒத்திகை நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
பூம்புகார் அருகே வானகிரி கடற்கரை கிராமத்தில் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் சுனாமி, புயல் மற்றும் வெள்ளக் காலங்களில் ஏற்படும் இயற்கை சீற்றங்களை எதிர்கொள்ளும் வகையில், அனைத்து துறை அலுவலர்கள், தன்னார்வலர்கள் உள்ளிட்டோர் இணைந்து மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்த இயற்கை பேரிடர் ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.
இதையொட்டி, சுனாமி காலங்களில் பாதிக்கப்படும் மீனவர்கள் மற்றும் குழந்தைகளை மீட்டு கொண்டு வருவது, அவர்களுக்கு சிகிச்சை அளிப்பது, பாதிக்கப்படும் கால்நடைகளை அப்புறப்படுத்துவது, கடற்கரையில் சிக்கும் மீனவர்களை மீட்டு கொண்டு வருவது, கிராம பொதுமக்களை பத்திரமாக மீட்டு வாகனங்கள் மூலம் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்வது, இடிபாடுகளில் சிக்கிக் கொள்ளும் நபர்களை ஜே.சி.பி. இயந்திரங்கள் மூலம் அப்புறப்படுத்துவது உள்ளிட்டவைகளை பல்வேறு துறை அதிகாரிகள் தத்ரூபாக செய்து காட்டினர். காலை 8 மணிக்கு தொடங்கிய ஒத்திகை, மதியம் ஒரு மணியளவில் நிறைவடைந்தது. இதில், மயிலாடுதுறை வருவாய் கோட்டாட்சியர் கண்மணி, நாகை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் தியாகராஜன், சீர்காழி டி.எஸ்.பி. வந்தனா, மாவட்ட தீயணைப்புத்துறை அலுவலர் சத்தியமூர்த்தி, சீர்காழி வட்டாட்சியர் சபீதாதேவி, மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குநர் சண்முகசுந்தரம், பேரிடர் மேலாண்மை திட்ட அலுவலர் உமாமகேஸ்வரி, மத்திய அரசின் பேரிடர் மேலாண்மை அதிகாரி ஒலா மற்றும் ஊரக வளர்ச்சித்துறை, கால்நடை பாராமரிப்புத் துறை, சுகாதாரத் துறை, மின்சாரத் துறை, காவல்துறை, தீயணைப்புத்துறை, வருவாய்த்துறை, உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com