மயிலாடுதுறை-தரங்கம்பாடி ரயில் போக்குவரத்தை தொடங்க வேண்டும்: சிஐடியு மாநாட்டில் தீர்மானம்

மயிலாடுதுறையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்திய தொழிற்சங்க மைய சிஐடியு மாவட்ட மாநாட்டில்

மயிலாடுதுறையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்திய தொழிற்சங்க மைய சிஐடியு மாவட்ட மாநாட்டில், மயிலாடுதுறை-தரங்கம்பாடி இடையே ரயில் போக்குவரத்தைத் தொடங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மயிலாடுதுறையில் இந்திய தொழிற்சங்க மைய சிஐடியு 13-ஆவது மாநாடு மற்றும் பேரணி நடைபெற்றது. இக்கூட்டத்தில், தரங்கம்பாடி - மயிலாடுதுறை இடையேயான ரயில் போக்குவரத்தை உடனே தொடங்க வேண்டும், காரைக்கால்- வேளாங்கண்ணி- திருத்துறைப்பூண்டி வழியாக ரயில் போக்குவரத்தைத் தொடங்க வேண்டும், ஹைட்ரோகார்பன் திட்டத்தை கைவிட வேண்டும், புதிய கல்வி கொள்கையை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாவட்ட தலைவர் பி.ஜீவா தலைமை வகித்தார். முன்னதாக, விஜயா திரையரங்கம் பகுதியில் இருந்து பேரணியை மாவட்ட துணைத் தலைவர் வி.மாரிமுத்து தொடங்கி வைத்தார். வரவேற்புக்குழு தலைவர் ஜி.ஸ்டாலின் வரவேற்றார். மாவட்டச் செயலாளர் சீனி.மணி வேலை அறிக்கை வாசித்தார். மாவட்ட பொருளாளர் ஏ.சிவனருட்செல்வன் வரவு-செலவு அறிக்கை வாசித்தார். 
மாவட்ட துணைத் தலைவர் நாகைமாலி சிறை சென்றவர்களுக்கு பாராட்டு தெரிவித்து பேசினார். மாநில துணைத் தலைவர் சி.ஜெயபால் தொடக்கவுரை ஆற்றினார். மாநில துணைத் தலைவர் கே.விஜயன் நிறைவுரை ஆற்றினார். முடிவில், வரவேற்புக்குழு செயலாளர் எம்.கலைச்செல்வன் நன்றி தெரிவித்தார். கூட்டத்தில், புதிய மாவட்டச் செயலாளராக சீனி.மணி, மாவட்டத் தலைவராக பி.ஜீவா, பொருளாளராக ஆர்.ரவீந்திரன், துணைத் தலைவர்களாக முன்னாள் எம்.எல்.ஏ., வி.மாரிமுத்து, சிவனருட்செல்வன், தங்கமணி, எஸ்.ஆர்.ராஜேந்திரன், ஏ.ரவிச்சந்திரன், துரைக்கண்ணு, துணைச் செயலாளர்களாக முனியாண்டி, எல்.பி.வசந்தி, மாரியப்பன், சிவக்குமார், எம்.கலைச்செல்வன், அருள்ராஜ் உள்ளிட்ட 45 பேர் கொண்ட புதிய மாவட்டக்குழு தேர்வு செய்யப்பட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com