வரைவு கல்வி கொள்கையை மத்திய அரசு திரும்பப் பெற வலியுறுத்தல்

வரைவு தேசியக் கல்வி கொள்கையை  மத்தியஅரசு திரும்பப் பெறவேண்டும் என  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

வரைவு தேசியக் கல்வி கொள்கையை  மத்தியஅரசு திரும்பப் பெறவேண்டும் என  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
மத்திய அரசின் வரைவு தேசியக் கல்வி கொள்கைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் பிரசாரங்கள் மற்றும் கையெழுத்து இயக்கங்களை நடத்தியது.
இதன்படி,நாகை மாவட்டத்தில், கட்சியின் சார்பில்  வரைவு தேசியக் கல்வி கொள்கைக்கு எதிரான பிரசாரங்கள் மற்றும் கையெழுத்து இயக்கம் நடைபெற்றன.
இதில் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட கையெழுத்துப் பதிவேடுகளை அக்கட்சியின் நிர்வாகிகளிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி, நாகையில் உள்ள கட்சி அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், கட்சியின் மாவட்டச் செயலாளர் நாகை மாலி, மாநிலக்குழு உறுப்பினரும், முன்னாள் எம்.எல்.ஏ-வுமான வி. மாரிமுத்து ஆகியோர்களிடம்  ஒன்றிய நிர்வாகிகள் கையெழுத்து பதிவேடுகளை ஒப்படைத்தனர்.
கூட்டத்தில் வி. மாரிமுத்து பேசியது: மாணவர்களின் கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் எதிர்காலம் ஆகியவற்றை பாழாக்கும் மத்திய அரசின் தேசிய வரைவுக் கல்வி கொள்கைக்கு எதிராக தமிழகமெங்கும், ஜூலை15 முதல் ஆகஸ்ட் 13 வரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில்  பிரசாரங்கள் நடத்தப்பட்டு 1 கோடி பேரிடம் கையெழுத்து பெறும் இயக்கம் நடத்தப்பட்டது. நாகை மாவட்டத்தில் சுமார் 3 லட்சம் கையெழுத்துகள்   பெறப்பட்டுள்ளது. தேசிய வரைவுக் கல்வி கொள்கையால்  மத்திய, மாநில அரசுகளில் பட்டியலில் இருந்த கல்வியானது, முழுமையாக மத்திய அரசின் பட்டியலுக்கு செல்கிறது. இதனால், மாநில அரசின் கல்வி சுதந்திரம் முற்றிலும் பறிக்கப்படும்.3-ஆம்  வகுப்பிலிருந்து தேசிய அளவில் தேர்வு என்பது, மாணவர்களின் சுயஅறிவை சிதைத்து விடும். எனவே தேசிய வரைவுக் கல்வி கொள்கையை  மத்திய திரும்பப்பெறவேண்டும் என்றார் அவர்.
நிகழ்ச்சியில் கட்சியின் மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் ஜி. ஜெயராமன், எஸ்.துரைராஜ், ஜி.ஸ்டாலின், சி.வி.ஆர். ஜீவானந்தம், ஒன்றியச் செயலாளர்கள் ஏ.வேணு, எம். முருகையன், பி.டி. பகு, எம். சுப்பிரமணியன், பி.கே. ராஜேந்திரன், கே.செந்தில்குமார், எம். ஜெயபால், மேகநாதன், சி. விஜயகாந்த் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com