கிருஷ்ண ஜயந்தி விழா

நாகை மாவட்டம், கருவாழக்கரை அழகுஜோதி அகாதெமி பள்ளியில் கோகுலாஷ்டமியையொட்டி, வியாழக்கிழமை நடைபெற்றது. 

நாகை பள்ளியில்...
நாகை மாவட்டம், கருவாழக்கரை அழகுஜோதி அகாதெமி பள்ளியில் கோகுலாஷ்டமியையொட்டி, வியாழக்கிழமை நடைபெற்றது. 
இவ்விழாவுக்கு, பள்ளி நிறுவனத் தலைவர் ஏ. கண்ணன் தலைமை வகித்தார். தாளாளர் சிவக்குமார் முன்னிலை வகித்தார். கோகுலாஷ்டமியை முன்னிட்டு,பள்ளி மாணவர்கள் கிருஷணர் மற்றும் ராதையை போன்று உடையணிந்து கிருஷ்ணாலீலா பாடல்களைப் பாடி நடனமாடினர். விழாவில் கிருஷ்ணர் அவதாரத்தின் முக்கியத்துவம் உணர்த்தப்பட்டன. தொடர்ந்து, பகவத் கீதை பாராயணம் நடைபெற்றது. விழாவில்,  பள்ளி முதல்வர் நோயல் மணி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

மயிலாடுதுறையில்...
மயிலாடுதுறை 2-ஆவது புதுத்தெருவில் உள்ள பாண்டுரெங்கன் பஜனை மடத்தில், நடைபெற்ற கிருஷ்ண ஜயந்தி விழாவில், பாண்டுரெங்கனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, திருப்பாவை, திருவெம்பாவை பாடல்கள் பாடி பஜனை நடைபெற்றது. இதில், 30-க்கும் மேற்பட்ட குழந்தைகள் கிருஷ்ணர், ராதை வேடமணிந்து பங்கேற்றனர். 
மகாதானத்தெரு கிருஷ்ணன் கோயில் சந்தில் உள்ள அம்பாபாய் அறக்கட்டளைக்கு சொந்தமான, பாமா ருக்மணி சமேத வேணுகோபால சுவாமி கோயிலில், கிருஷ்ண ஜயந்தி விழாவை முன்னிட்டு, சுவாமிக்கு வெண்ணை சாற்றி சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.

சீர்காழியில்...
சீர்காழி  கடைவீதியில் உள்ள இந்து சமய அறநிலையத் துறையின் பாண்டுரெங்க பஜனை மடத்தில் கிருஷ்ண ஜயந்தி விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
விழாவையொட்டி, பாண்டு ரெங்க சுவாமிக்கு சிறப்பு வழிபாடு, அர்ச்சனைகள் நடைபெற்றன. தொடர்ந்து, உறியடி உத்ஸவம் நடைபெற்றது. தொடர்ந்து, அலங்கரிக்கப்பட்ட பாண்டு ரெங்க சுவாமிக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. இதில் கோயில் கணக்கர் ராஜி, வர்த்தகர்கள் பஞ்சாட்சரம் மற்றும் சுந்தரம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com