விவசாயிகளுக்கு விலையில்லா தென்னங்கன்றுகள்: அமைச்சர் வழங்கினார்

நாகை மாவட்டம், தலைஞாயிறு ஊராட்சி ஒன்றியம் வெள்ளப்பள்ளம் ஊராட்சி, வானவன்மகாதேவி கிராமத்தில்

நாகை மாவட்டம், தலைஞாயிறு ஊராட்சி ஒன்றியம் வெள்ளப்பள்ளம் ஊராட்சி, வானவன்மகாதேவி கிராமத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு வேளாண்துறையின் வாழ்வாதாரத் தொகுப்புத் திட்டத்தின்கீழ், விலையில்லா தென்னங்கன்றுகளை அமைச்சர் ஓ.எஸ். மணியன் வெள்ளிக்கிழமை வழங்கினார்.
நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஆட்சியர் சீ.சுரேஷ்குமார் தலைமை வகித்தார். விவசாயிகளுக்கு விலையில்லா தென்னங்கன்றுகளை வழங்கி அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பேசியது:
கஜா புயலில் விழுந்த மரங்களுக்கு ஈடாக புதிய மரங்களை உருவாக்கும் நோக்கத்துடன் மறுசீரமைப்புப் பணிகள் என்ற வகையில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் புதிதாக மரங்கன்றுகள் வழங்கப்படுகின்றன.
சுனாமி எப்படி கடற்கரையோரம் வாழ்ந்த மக்களை மிகுந்த பாதிப்புக்குள்ளாக்கியதோ, அதேபோல் நம் பகுதியில் வாழ்ந்து வந்த மக்களுக்கு வாழ்வளித்த மரங்களை கஜா புயல் முற்றிலுமாக அழித்துவிட்டது.
 தொடர்ந்து மக்களுக்கான மறுவாழ்வுப் பணிகள், பட்டா வழங்குதல், கோயில் நிலங்களில் குடியிருப்போருக்கு பட்டா வழங்குதல், அரசு வீடுகள் கட்டித் தர நடவடிக்கை மேற்கொள்ளுதல், மரக்கன்றுகள் வழங்குதல், கோடை காலமாதாலால் சொட்டு நீர்ப்பாசனக் கருவிகள் வழங்குதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள  நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
 வெள்ளப்பள்ளம் கிராமத்தில் 97 பயனாளிகளுக்கு 7,000 தென்னங்கன்றுகளும், என்னுடைய சொந்த முயற்சியால் 1,500 தென்னங்கன்றுகளும் வழங்கப்பட உள்ளன. இதுவரை வெள்ளப்பள்ளம் கிராமத்துக்கு 2,424 தென்னங்கன்றுகள் 58 பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன.
 இன்னும் 765 பயனாளிகளுக்கு 28,505 தென்னங்கன்றுகள் வழங்கப்பட உள்ளன. இக்கிராமத்தில் தென்னை நிவாரணத் தொகையாக 4 கோடியே 17 இலட்சத்து 21 ஆயிரத்து 900 ரூபாய் வழங்கப்பட்டுள்ளது என்றார் அமைச்சர்.
நிகழ்ச்சியில், இணை இயக்குநர் (வேளாண்மை) எம்.நாராயணசாமி, துணை இயக்குநர் (வேளாண்மை) பன்னீர் செல்வம், உதவி இயக்குநர் (வேளாண்மை) கருப்பையா, வேளாண் உதவி விதை அலுவலர் ரவி, தலைஞாயிறு தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கித் தலைவர் அவை.ஆர்.பாலசுப்பிரமணியன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மீ.செல்வகுமார், வட்டார வளர்ச்சி அலுவலர் செல்வராசு
உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com