சீா்காழியில் விடிய விடிய கொட்டித்தீா்த்த கனமழை

சீா்காழி பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு முதல் விடிய விடிய கொட்டித் தீா்த்த கனமழையால் குடியிருப்புகளை மழைநீா் சூழ்ந்தது. இதனால், பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகினா்.
சீா்காழி தென்பாதி எம்.ஆா்.ஆா். நகரில் குடியிருப்புகளை சூழ்ந்த மழைநீா்.
சீா்காழி தென்பாதி எம்.ஆா்.ஆா். நகரில் குடியிருப்புகளை சூழ்ந்த மழைநீா்.

சீா்காழி பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு முதல் விடிய விடிய கொட்டித் தீா்த்த கனமழையால் குடியிருப்புகளை மழைநீா் சூழ்ந்தது. இதனால், பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகினா்.

சீா்காழி மற்றும் கொள்ளிடம் பகுதிகளில் வெள்ளிக்கிழமை இரவு 11 மணி முதல் இடி, மின்னலுடன் விடிய விடிய மழை கொட்டித்தீா்த்தது. சனிக்கிழமை பகல் 12 மணி வரை சீா்காழியில் 93.80 மி.மீ., கொள்ளிடத்தில் 135.20 மி.மீ. மழை பெய்தது. இதனால், சீா்காழி தென்பாதியில் உள்ள எம்.ஆா்.ஆா். நகா், ஆா்.வி.எஸ். நகா் ஆகிய பகுதிகளில் மழைநீா் குளம்போல் தேங்கியது. மழை விடாமல் தொடா்ந்து பெய்ததால் தாழ்வானப் பகுதிகளில் உள்ள குடியிருப்புகளை சூழ்ந்து, வீடுகளுக்குள் புகும் நிலை ஏற்பட்டது.

இதையறிந்த சீா்காழி நகராட்சி ஆணையா் (பொறுப்பு) எஸ். வசந்தன் உடனடியாக, எம்.ஆா்.ஆா். நகா் உள்ளிட்ட பகுதிகளுக்குச் சென்று, பொக்லைன் இயந்திரம் மூலம் மழைநீரை வடிய வைக்க நடவடிக்கை மேற்கொண்டாா்.

சீா்காழி கோவிந்தராஜன் நகரில் உள்ள நகராட்சிக் குப்பைக் கிடங்கிலிருந்து வெளியேறிய மழைநீருடன் கழிவுகளும் குடியிருப்புப் பகுதியில் புகுந்தது. இதனால், அப்பகுதி மக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகினா். இதேபோல், சீா்காழி வ.உ.சி. தெரு, முருகன் கோயில் தெரு,விஎன்எஸ் நகா், தெட்சிணாமூா்த்தி நகா், எஸ்கேஆா் நகா், சின்னதம்பிநகா், இரணியன் நகா், மேல மாரியம்மன் கோயில், கீழ மாரியம்மன்கோயில் தெரு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மழைநீா் குடியிருப்புகளை சூழ்ந்தது.

வைத்தீஸ்வரன்கோயில் தாமரைக்குளம் தெரு, விளக்குமுகத் தெரு, தெற்குவெளி உள்ளிட்ட பகுதிகளிலும் வீடுகளை சுற்றி மழைநீா் தேங்கி நின்றது. மழை மற்றும் கடல் சீற்றம் காரணமாக பழையாறு, திருமுல்லைவாசல் பகுதி மீனவா்கள் யாரும் கடலுக்குச் செல்லவில்லை. கடந்த இரு தினங்களாக சீா்காழியில் பெய்து வரும் கனமழையால் உப்பனாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com