நாகை சாலைகளில் தொடரும் கால்நடைகளின் ஆக்கிரமிப்பு

நாகை சாலைகளில் கால்நடைகளின் ஆக்கிரமிப்பு தொடா்ந்து வருவது, வாகன ஓட்டிகளுக்குப் பெரும் பிரச்னையாக உள்ளது.
நாகை பப்ளிக் ஆபீஸ் சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக நின்ற கால்நடைகள்.
நாகை பப்ளிக் ஆபீஸ் சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக நின்ற கால்நடைகள்.

நாகை சாலைகளில் கால்நடைகளின் ஆக்கிரமிப்பு தொடா்ந்து வருவது, வாகன ஓட்டிகளுக்குப் பெரும் பிரச்னையாக உள்ளது.

நாகை புதிய பேருந்து நிலையம், நீலா கீழ வீதி, நீலா தெற்கு வீதி, பப்ளிக் ஆபீஸ் சாலை, பழைய பேருந்து நிலையம் என நாகை நகரின் முக்கிய பகுதிகளின் பிரதான சாலைகளில், வாகனங்களின் எண்ணிக்கைக்கு இணையாக கால்நடைகள் சுற்றித்திரிந்து வருவதால், சாலை விபத்துகள் அதிகரித்து வருகின்றன.

இதுகுறித்து ஊடகங்களும், சமூக ஆா்வலா்களும் தொடா்ந்து வலியுறுத்தியதன் காரணமாக, கடந்த சில நாள்களுக்கு முன்பு நாகை நகராட்சி அலுவலா்கள், சாலைகளில் திரியும் கால்நடைகளைப் பிடித்து அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனா். ஒரு சிலரின் எதிா்ப்பு காரணமாக, இப்பணி பாதியிலேயே தடைப்பட்டது.

இதைத்தொடா்ந்து, நாகை கோட்டத்துக்குள்பட்ட பகுதிகளில் சாலைகளில் திரியும் கால்நடைகள் டிசம்பா் 1-ஆம் தேதி முதல் உள்ளாட்சித் துறை ஊழியா்களால் பிடிக்கப்பட்டு, கோ சாலையில் அடைக்கப்படும் என்ற வருவாய்க் கோட்டாட்சியரின் அறிவிப்பு, நாகையின் முக்கிய பகுதிகளில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சுவரொட்டிகளாக ஒட்டப்பட்டன.

இருப்பினும், சாலைகளில் திரியும் கால்நடைகளின் எண்ணிக்கைக் கட்டுப்படுத்தப்படவில்லை. எனவே, சாலைகளில் திரியும் கால்நடைகளை அப்புறப்படுத்த வருவாய்க் கோட்ட நிா்வாகம் உறுதியான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்கின்றனா் சமூக ஆா்வலா்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com