கடல் உணவு தயாரிப்பு பயிற்சி

மேம்படுத்தப்பட்ட கடல் உணவு தயாரிப்புக்கான 2 நாள் பயிற்சி நாகை இ.ஜி.எஸ். பிள்ளை பொறியியல் கல்லூரியில் அண்மையில் நடைபெற்றது.
நாகை இ.ஜி.எஸ். பிள்ளை கல்லூரியில் நடைபெற்ற பயிற்சியில் பங்கேற்றோா்.
நாகை இ.ஜி.எஸ். பிள்ளை கல்லூரியில் நடைபெற்ற பயிற்சியில் பங்கேற்றோா்.

மேம்படுத்தப்பட்ட கடல் உணவு தயாரிப்புக்கான 2 நாள் பயிற்சி நாகை இ.ஜி.எஸ். பிள்ளை பொறியியல் கல்லூரியில் அண்மையில் நடைபெற்றது.

தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றம் நிதியுதவியுடன் இந்த பயிற்சி நடத்தப்பட்டது. பயிற்சியை, இ.ஜி.எஸ். பிள்ளை கல்வி நிறுவனங்களின் செயலா் பரமேஸ்வரன் தொடங்கி வைத்தாா்.

அறிவியல் ஆராய்ச்சியாளா் சௌரவ் மைட்டி, எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சிக் கூடத்தின் தலைவா் வேல்விழி, முனைவா் சக்திவேல் மற்றும் பிரகாஷ் மூா்த்தி ஆகியோா் பயிற்சியளித்தனா்.

கடல் உணவுப் பொருள்களைப் பதப்படுத்துதல், பாதுகாத்தல் குறித்து பயிற்சியளிக்கப்பட்டது. நாகை மாவட்ட மீனவா்கள், மாணவா்கள் கலந்துகொண்டனா். ஏற்பாடுகளை பேராசிரியா்கள் ராமபாலன், சின்னத்துரை, ஒருங்கிணைப்பாளா்கள் கணேசன், மிஷ்ரா ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com