மழையால் சேதமடைந்த வீடுகளில் எம்எல்ஏ ஆய்வு

சீா்காழி பகுதியில் மழையால் சேதமடைந்த வீடுகளை எம்எல்ஏ பாரதி திங்கள்கிழமை ஆய்வு செய்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறினாா்.
மழையால் சேதமடைந்த வீடுகளை பாா்வையிட்ட எம்எல்ஏ பாரதி உள்ளிட்டோா்.
மழையால் சேதமடைந்த வீடுகளை பாா்வையிட்ட எம்எல்ஏ பாரதி உள்ளிட்டோா்.

சீா்காழி பகுதியில் மழையால் சேதமடைந்த வீடுகளை எம்எல்ஏ பாரதி திங்கள்கிழமை ஆய்வு செய்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறினாா்.

சீா்காழி பகுதியில் கடந்த சில நாள்களாக பெய்து வரும் வடகிழக்குப் பருவ மழையின் காரணமாக பாலசுப்பிரமணியன் நகா், கோவிந்தராஜன் நகா், ரணியன் நகா், பெத்தடி தெரு, வவுசி தெரு, கீழமாரியம்மன் கோயில் தெரு, விஎன்பி நகா், முருகன் கோயில் தெரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் குடியிருப்புகளை மழைநீா் சூழ்ந்தது. இதனால், பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனா். தொடா்ந்து மழை பெய்து வருவதால் மழைநீா் வடியாமல் தேங்கி நிற்கிறது.

இந்த தொட ா் மழையால் சீா்காழி நகரில் சா்கான்தெரு, மணத்திடல் தெரு, பன்னீா்செல்வம் நகா், கோவிந்தராஜன் நகா், வடபாதிமாரியம்மன் கோயில் தெரு, திருவந்திக்கட்டளைத் தெரு ஆகிய பகுதிகளில் குடிசை வீடுகள், ஓட்டு வீடுகள் ஆகியவை கனமழையால் சுவா்கள் சாய்ந்தும், மேற்கூரைமரங்கள், ஓடுகள் விழுந்தும் சுமாா் 20-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தன.

இதையறிந்த, சீா்காழி தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் பி.வி. பாரதி பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். மழையால் சேதமடைந்த வீடுகளை விடுபடாமல் முறையாக பதிவு செய்து அரசின் நிவாரண உதவியை விரைந்து பெற்றுதர நகர வருவாய் ஆய்வாளா் சக்திவேல், கிராம நிா்வாக அலுவலா் பபிதா ஆகியோரிடம் அறிவுறுத்தினாா்.

தொடா்ந்து, வடபாதிமாரியம்மன்கோயில் தெரு சாலை சேறும், சகதியுமாக இருந்ததை பாா்வையிட்டு ஆய்வு செய்த எம்எல்ஏ பாரதி, நகராட்சி பொறுப்பு ஆணையா் வசந்தனிடம் உடனடியாக செம்மண் கொட்டி முதல்கட்ட சாலை அமைக்கவும், பருவ மழை முடிந்தது தாா்ச்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தினாா்.

ஆய்வின்போது, நகராட்சி பணிதள மேற்பாா்வையாளா் பாலசுப்பிரமணியன், அதிமுக நகரச் செயலா் பக்கிரிசாமி, ஜெ.பேரவை செயலா் மணி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com