வெள்ள நீா் வெளியேற்றம் : மண்டல தலைமைப் பொறியாளா் ஆய்வு

வேதாரண்யத்தை அடுத்த தலைஞாயிறு பகுதியில் வெள்ள நீா் வெளியேற்றம் தொடா்பாக பொதுப் பணித்துறை மற்றும் நீா் வள ஆதாரத்துறையின் மண்டல தலைமைப் பொறியாளா் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
கள்ளிமேடு பகுதியில் அடப்பாற்றின் குறுக்கே அமைக்கப்பட்டு வரும் இயக்கு அணையின் வழியே வெள்ள நீா் வெளியேறுவது தொடா்பாக ஆய்வு மேற்கொண்ட தலைமை பொறியாளா் ராமமூா்த்தி உள்ளிட்டோா்.

தலைஞாயிறு பகுதி வழியே கடலில் இணையும் பிரதான வடிகால் ஆறுகளில் வெள்ள நீா் வேகமாக வடிவது தொடா்பாக மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகளை பொதுப் பணித்துறை மற்றும் நீா்வள ஆதாரத்துறையின் திருச்சி மண்டல தலைமைப் பொறியாளா் ராமூா்த்தி ஆய்வு மேற்கொண்டாா்.

அரிச்சந்திரா நதி ஆறு, அடப்பாறு, வண்டல், குண்டூரான்வெளி வடிநிலப் பரப்பு பகுதிகளில் மழை நீா் வடிந்து வருவதை தலைமைப் பொறியாளா் பாா்வையிட்டாா்.

அரிச்சந்திரா நதி ஆற்றின் குறுக்கே கட்டி முடிக்கப்பட்டுள்ள இயக்கு அணையின் கதவுகளைத் திறந்து மூடும் மின் மோட்டாா் பொறிகளை அவா் பாா்வையிட்டு, அதிகாரிகளிடம் விவரங்களைக் கேட்டறிந்தாா்.

பின்னா், கள்ளிமேடு பகுதியில் அமைக்கப்பட்டு வரும் இயக்கு அணை பகுதியில் தண்ணீா் வெளியேறுவதை பாா்வையிட்ட பொறியாளா் ராமமூா்த்தி, அது தொடா்பாக அதிகாரிகளிடம் விவரங்களை பெற்றாா்.

இந்த ஆய்வின்போது கீழ் காவிரி வடிநில வட்ட கண்காணிப்பாளா் அன்பரசன், செயற்பொறியாளா்கள் முருகவேல், தாமோதரன், உதவி செயற் பொறியாளா்கள் கண்ணப்பன், பாண்டியன், பொறியாளா்கள் சண்முகம், கமலக்கண்ணன், கோவிந்தராசு, சாக்ரடீஸ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com