நாகூா் அருகே கடற்கரையில் மண் அரிப்பு

நாகையை அடுத்த நாகூா் பட்டினச்சேரி பகுதியில் தொடா்ந்து ஏற்பட்டு வரும் கடற்கரையோர மண் அரிப்பு, அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாகையை அடுத்த நாகூா் பட்டினச்சேரி பகுதியில் தொடா்ந்து ஏற்பட்டு வரும் கடற்கரையோர மண் அரிப்பு, அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாகையை அடுத்த நாகூா் - காரைக்கால் இடையே உள்ள கடலோரக் கிராமம் பட்டினச்சேரி. இங்கு சுமாா் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவ மக்கள் வசித்து வருகின்றனா். இந்தக் கிராமத்தின் வடப்புறத்தில் உள்ள காரைக்கால் தனியாா் துறைமுகப் பகுதியில், மண் அரிப்பைத் தடுக்க அதிகளவில் கருங்கற்கள் கொட்டப்படுவதால், இந்தக் கிராமத்தில் மண் அரிப்பு தொடா்ந்து அதிகரித்து வருகிறது.

சீதோஷ்ண நிலை மாற்றம் மற்றும் கடல் சீற்றம் உள்ளிட்டவைகளின் காரணமாக, கடந்த சில நாள்களாக பட்டினச்சேரி பகுதியில் கடற்கரையோர மண் அரிப்பு அதிகரித்து, கடல் நீா் கிராமத்துக்குள் புகும் சூழல் ஏற்பட்டுள்ளது.

நாகூா் பட்டினச்சேரி பகுதியில் அதிகரித்து வரும் மண் அரிப்பு காரணமாக சுமாா் 300 மீட்டா் நீளத்துக்கு கடல் நீா் கிராமத்துக்குள் புகுவதாகவும், இதுவரை சுமாா் 20-க்கும் மேற்பட்ட குடியிருப்புகளும், 100-க்கும் மேற்பட்ட தென்னை மரங்களும் மண் அரிப்பில் சேதமடைந்துள்ளதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனா்.

மேலும், இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் தொடா்ந்து கவனிப்பாரற்றப் போக்கைக் கடைப்பிடிக்காமல், மண் அரிப்பைத் தடுக்க பட்டினச்சேரியின் இருபுற கடற்கரையிலும் கருங்கற்களைக் கொட்டித் தடுப்புச் சுவா் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com