குளங்களை தூர்வார வேண்டும்: திமுக ஊராட்சி சபைக் கூட்டத்தில் தீர்மானம்

திருவெண்காடு அருகே மணிக்கிராமம் ஊராட்சியில் செவ்வாய்கிழமை நடைபெற்ற திமுக ஊராட்சி சபைக் கூட்டத்தில்

திருவெண்காடு அருகே மணிக்கிராமம் ஊராட்சியில் செவ்வாய்கிழமை நடைபெற்ற திமுக ஊராட்சி சபைக் கூட்டத்தில் குளங்களைத் தூர்வார வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 
மணிக்கிராமத்தில் சீர்காழி கிழக்கு ஒன்றியச் செயலர் சசிக்குமார் தலைமையில் நடைபெற்ற திமுக ஊராட்சி சபைக் கூட்டத்தில், மணிக்கிராமம் ஊராட்சியில் அமைந்துள்ள 8 குளங்கள் ஆக்கிரமைப்புகளால் தூர்ந்துபோய் செடிகொடிகள் மண்டி காணப்படுகின்றன. இதனால் மழைகாலங்களில் தண்ணிர் தேங்குவது தடைபட்டுள்ளது. 
எனவே, இந்த 8 குளப் பகுதியில் காணப்படும் ஆக்கிரமைப்புகளை அகற்றி தூர்வார நடவடிக்கை எடுக்கவேண்டும், மணிக்கிராமம் ஊராட்சியில் பழுதடைந்து காணப்படும் ஊராட்சி அலுவலகம் மற்றும் நூலகத்துக்கு புதிய கட்டடம் கட்டித்தரவேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றபட்டன. தொடர்ந்து, கூட்டத்தில் கலந்துகொண்ட மக்களிடமிருந்து நாகை வடக்கு மாவட்ட திமுக செயலர் நிவேதா முருகன் மனுக்களை பெற்றுக்கொண்டார்.
கூட்டத்தில் சட்டப் பேரவை முன்னாள் உறுப்பினர் பன்னீர்செல்வம், தலைமைச் செயற்குழு உறுப்பினர் ராமஇளங்கோவன், மாவட்ட பொருளாளர் ரவி, ஒன்றிய துணைச் செயலர் முல்லைவேந்தன், ஒன்றியச் செயலர்கள் செல்லசேதுரவிக்குமார், பிரபாகரன், முன்னாள் ஒன்றியக் குழுத் தலைவர் விஜயேஸ்வரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com