மாவட்டத்தில் ஜெயலலிதா பிறந்த நாள் விழா

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெ. ஜெயலலிதாவின் 71-ஆவது பிறந்த நாள் விழா நாகை மாவட்டத்தின் பல்வேறு

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெ. ஜெயலலிதாவின் 71-ஆவது பிறந்த நாள் விழா நாகை மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது.
நாகையில்...
நாகை நகர அதிமுக சார்பில், நகரச் செயலாளர் தங்க. கதிரவன் தலைமையில்  தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம், தமிழ்நாடு விரைவுப் போக்குவரத்துக் கழக பணிமனைகள்  மற்றும் நகரின் பல்வேறு இடங்களில் கட்சிக் கொடிகள் ஏற்றப்பட்டு,  பொதுமக்களுக்கு  இனிப்புகள் வழங்கப்பட்டன.
நாகூர், பட்டினச்சேரி மற்றும் சாமந்தான்பேட்டை பகுதிகளில் கட்சிக் கொடி ஏற்றப்பட்டு, 700-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவியருக்கு எழுது பொருள்கள் வழங்கப்பட்டன. நாகை சட்டையப்பர் கோயில்  தெருவில் உள்ள நாம்கோ தொண்டு நிறுவனத்தில் தங்கியுள்ள முதியோர்கள் மற்றும் குழந்தைகளுக்கு அதிமுக நாகை மாவட்ட அவைத் தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஆர். ஜீவானந்தம் தலைமையில் புத்தாடைகள் மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சிகளில், அதிமுக மீனவரணி மாவட்டத் துணைச் செயலாளர்  கண்ணன், வெளிப்பாளையம் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் சக்திவேல், ஓட்டுநர் அணி மாவட்டத் துணைச் செயலாளர் ராஜேந்திரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். 
இதேபோல், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில், கீழ்வேளூரில் மாணவ, மாணவியருக்கு தனியார் பேருந்தில் பயணிக்க இலவச பேருந்து பயண அட்டைகள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சியில், அமமுக நாகை தெற்கு மாவட்டச் செயலாளர் ஆர். சந்திரமோகன் பங்கேற்று மாணவ, மாணவியருக்கு பேருந்து பயண அட்டைகள் மற்றும் இனிப்புகளை வழங்கினார். கீழ்வேளூர் ஒன்றியச் செயலாளர் ஜெயவேல், பேரூராட்சி செயலாளர் முஹம்மது அனுஷ், ஒன்றிய இலக்கிய அணி செயலாளர் கே.பி. எஸ். கருணாநிதி, மாணவரணி மாவட்டச் செயலாளர் முரளிதரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அதிமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினர்
திருமருகல் ஒன்றிய அதிமுக சார்பில், சந்தைப் பேட்டை கடைத்தெருவில் வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவின் உருவப் படத்துக்கு நிர்வாகிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினர். பின்னர், பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர். இதேபோல், ஒன்றியத்துக்கு உள்பட்ட பல்வேறு இடங்களில் கட்சிக் கொடி ஏற்றப்பட்டது.
காரையூர் ஊராட்சியில் மாற்றுக் கட்சியிலிருந்து விலகி சுமார் 30 பேர் அதிமுகவில் இணைந்தனர். இந்நிகழ்ச்சியில் கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கியின் முன்னாள் தலைவர் ஆசைமணி, அதிமுக ஒன்றியச் செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
திட்டச்சேரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பேரூராட்சி கழக செயலாளர் அப்துல் பாசித் கலந்துகொண்டு ஜெயலலிதாவின் உருவப்படத்துக்கு மரியாதை செலுத்தினார்.
மயிலாடுதுறையில்...
மயிலாடுதுறை, பிப்.24: மயிலாடுதுறையில் நகர அதிமுக சார்பில், நகரச் செயலர் வி.ஜி.கே. செந்தில்நாதன் தலைமையில் நடைபெற்ற ஜெயலலிதா பிறந்த நாள் நிகழ்ச்சியில், மயிலாடுதுறை சட்டப் பேரவை உறுப்பினர் வீ. ராதாகிருஷ்ணன் பங்கேற்று கொத்தத் தெருவில் உள்ள அன்பகம் காப்பக குழந்தைகள் மற்றும் மனவளர்ச்சி குன்றியோருக்கு காலை உணவும், பிரட், பால்பவுடர், பழங்கள், அத்தியாவசி மருந்து பொருள்கள் ஆகியவற்றை வழங்கினார். இதில், நகர அவைத் தலைவர் எஸ். அலி, முன்னாள் நகரச் செயலர் கிருஷ்ணமூர்த்தி, நிர்வாகி ராஜசேகர், நகர துணைத் தலைவர் நாஞ்சில் கார்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதையடுத்து, நகரின் அனைத்து வார்டுகளிலும் அதிமுக கொடியேற்றப்பட்டது.
பேரணி
செம்பனார்கோவில் செல்வம் சதுக்கத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவின் உருவப்படத்துக்கு பூம்புகார் சட்டப் பேரவை உறுப்பினர் எஸ். பவுன்ராஜ் உள்பட அதிமுக நிர்வாகிகள் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
முன்னதாக, அதிமுக அலுவலகத்தில் இருந்து 200-க்கும் மேற்பட்டோர் பேரணியாக செல்வம் சதுக்கத்தை வந்தடைந்தனர்.
நிகழ்ச்சியில், சட்டப் பேரவை முன்னாள் உறுப்பினர்கள் ரங்கநாதன், விஜயபாலன், வடக்கு ஒன்றியச் செயலாளர் சுந்தர் ராஜன், கீழையூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத் தலைவர் கபடி பாண்டியன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
குத்தாலத்தில்...
குத்தாலம் பேருந்து நிலையத்தில், குத்தாலம் வடக்கு ஒன்றிய அதிமுக சார்பில், ஜெயலலிதாவின் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. கட்சியின் ஒன்றியச் செயலர் சி. ராஜேந்திரன், நகரச் செயலர் எம்.சி. பாலு ஆகியோர் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், முன்னாள் ஒன்றியச் செயலர் என். ரெத்தினம், ஒன்றிய மாணவரணிச் செயலர் பாலாஜி, நகர நிர்வாகிகள் கண்ணையன், ஏ. தாஜ்தீன், ஜெயபாலகிருஷ்ணன், ராஜாராமன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 
இதேபோல், தெற்கு ஒன்றிய அதிமுக சார்பில் மங்கைநல்லூர் பேருந்து நிலையத்தில், ஒன்றியச் செயலர் என். தமிழரசன், சட்டப் பேரவை முன்னாள் உறுப்பினர் ஏ. நடராஜன் ஆகியோர் தலைமையில் ஜெயலலிதாவின் திருவுருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில், ஒன்றிய துணைச் செயலர் மோகன், ஊராட்சி முன்னாள் தலைவர்கள்  இளங்கோவன், ரவி, சாமிக்கண்ணு, ரமேஷ், நீலமேகம், இளங்கோவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். தொடர்ந்து, குத்தாலம் ஒன்றியத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் ஜெயலலிதாவின் திருவுருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. 
அன்னதானம்
இதேபோல், குத்தாலம் மன்மதீசுவரர் கோயிலில் ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி, சிறப்பு கூட்டு வழிபாடு மற்றும் அன்னதானம் நடைபெற்றது.
நிகழ்ச்சியில்  மயிலாடுதுறை சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினர் வி. ராதாகிருஷ்ணன், மயிலாடுதுறை நகர செயலாளர் வி.ஜி.கே. செந்தில்நாதன், குத்தாலம் முன்னாள் பேரூராட்சி தலைவர் எம்.சி.பாலு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பின்னர், அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
 இந்த நிகழ்ச்சியில் முன்னாள் ஒன்றியச் செயலாளர் என்.ரெத்தினம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com