புகையில்லா போகி விழிப்புணர்வு கருத்தரங்கம்

நாகை, வெளிப்பாளையம் ரயிலடி பகுதியில் உள்ள நடராஜன் தமயந்தி உயர்நிலைப்பள்ளியில் புகையில்லா

நாகை, வெளிப்பாளையம் ரயிலடி பகுதியில் உள்ள நடராஜன் தமயந்தி உயர்நிலைப்பள்ளியில் புகையில்லா போகிப் பண்டிகை குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் வியாழக்கிழமை நடைபெற்றது.
நாகை மாவட்ட மாசு கட்டுப்பாட்டு வாரியம், தேசிய பசுமைப் படை ஆகியவற்றின் சார்பில் இந்தக் கருத்தரங்கம் நடைபெற்றது. மாசு கட்டுப்பாட்டு வாரிய சுற்றுச் சூழல் பொறியாளர் ராமசுப்பு சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, சுற்றுச் சூழலை பாதுகாப்பதன் அவசியங்களை விளக்கிப் பேசினார்.
நாகை கல்வி மாவட்ட தேசிய பசுமைப் படை ஒருங்கிணைப்பாளர் முத்தமிழ் ஆனந்தன், நெகிழி பொருள்கள் மற்றும் ரசாயான கலவை கொண்ட பொருள்களை எரிப்பதன் மூலம் ஏற்படும் பாதிப்புகளை விளக்கிப் பேசினார். 
பள்ளித் தலைமை ஆசிரியர் புவனேஸ்வரி மற்றும் ஆசிரியர்கள், மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com