கூட்டுக் குடிநீர் திட்டக் குழாயில் உடைப்பு: வீணாகும் குடிநீர்

திருக்குவளை குண்டையூர் சாலையில் கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்டக் குழாயில் ஏற்பட்ட உடைப்பு காரணமாக


திருக்குவளை குண்டையூர் சாலையில் கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்டக் குழாயில் ஏற்பட்ட உடைப்பு காரணமாக குடிநீர் வீணாவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருக்குவளை குண்டையூர் கிராமத்தில் உள்ள கொள்ளிடம் கூட்டுக்குடிநீர் திட்டத்தின் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் மோட்டார் அலுவலகம் மூலம் எட்டுக்குடி, திருவாய்மூர், ஆலங்குடி, தலைஞாயிறு, சித்தாய்மூர், வாழக்கரை, திருப்பூண்டி, மேலப்பிடாகை, கீழையூர், கீரம்பெர் ஆகிய 10 கிராமங்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. தற்போது திருக்குவளை- குண்டையூர் சாலையில் சுமார் 15 இடங்களில் உடைப்பு ஏற்பட்டிருப்பதால், தண்ணீர் பெருமளவில் வீணாகிறது. இவ்வாறு வெளியேறும் தண்ணீர், சாலைகளில் தேங்கி நிற்பதால், கொசுக்கள் உற்பத்தியாவதோடு, சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டு பொதுமக்களைப் பெரிதும் பாதிக்கிறது. எனவே, கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்டக் குழாயில் ஏற்பட்ட உடைப்பை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com