அரசு உயர்நிலைப் பள்ளிக்கு விளையாட்டு மைதானம்: மாணவர்கள் கோரிக்கை

சீர்காழியை அடுத்த அகணி அரசு உயர்நிலைப்பள்ளிக்கு விளையாட்டு மைதானம் ஏற்படுத்தித் தர வேண்டுமென மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சீர்காழியை அடுத்த அகணி அரசு உயர்நிலைப்பள்ளிக்கு விளையாட்டு மைதானம் ஏற்படுத்தித் தர வேண்டுமென மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அகணி அரசு அரசு உயர்நிலைப் பள்ளியில் 250-க்கும் அதிகமான மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். 2017-18, 2018-19 கல்வி ஆண்டுகளில், பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வுகளில் இப்பள்ளி 100% தேர்ச்சிபெற்றது. இந்தப் பள்ளிக்கு என விளையாட்டு மைதானம் இல்லை. எனவே விளையாட்டுப் போட்டிகள் நடத்தவும், உடற்கல்வி பயிற்சி அளிக்கவும் நகரில் உள்ள பிற பள்ளி விளையாட்டு மைதானங்களுக்கு மாணவ, மாணவிகள் அழைத்துச் செல்லப்படுகின்றனர். இதனால், மாணவர்கள் சோர்வடைய நேரிடுகிறது. மேலும், நீண்ட தூரத்துக்கு தினமும் பயிற்சி பெற மாணவ, மாணவிகளை அனுப்பி வைக்க பெற்றோர்களும் தயங்குகின்றனர். ஆகையால் விளையாட்டுப் போட்டிகளை ஊக்குவித்து, அதற்கு பல்வேறு நிதி உதவிகளை அளித்துவரும் மாநில அரசு, இப்பள்ளிக்கு விளையாட்டு  மைதானம் ஏற்படுத்தி தர வேண்டுமெனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், இப்பள்ளியில் இரவு நேர காவலாளியை நியமிக்க வேண்டும். அலுவலக உதவியாளர் போன்ற காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். மாணவர்களுக்கு போதுமான இருக்கை  வசதிகள் செய்து தர வேண்டும்  என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழக அரசு  கல்வித்துறைக்கு வழங்கிவரும் பல்வேறு சிறப்பு திட்டங்களால் கிராமப்புற பள்ளிகளில் இடைநிற்றல் தடுத்து நிறுத்தப்படுவதோடு, தனியார் பள்ளிகளுக்கு நிகரான ஆங்கிலவழிக் கல்விக்கொள்கையும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
 இவ்வாறு இந்த அகணி அரசு உயர்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு ஏட்டுக்கல்வி மட்டும் அளிப்பதோடு நின்றுவிடாமல், உடற்கல்வியையும் அளிக்கும் வகையில் விரைவில் விளையாட்டு மைதானத்தை ஏற்படுத்தி, மாணவர்களுக்கு புத்துணர்ச்சியோடு கூடிய கல்வி பயிலும் சூழலை ஏற்படுத்திட வேண்டும் என பெற்றோர்களில் ஒருவரும், சமூக ஆர்வலருமான ஜி.ஏ. ராஜேஷ் ஆகியோர் வலியுறுத்தியுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com