தமிழகம் தவிர நாடு முழுவதும் நீட் தேர்வு ஏற்கப்பட்டுள்ளது: அமைச்சர் ஓ.எஸ். மணியன்

நீட் தேர்வு முறை தமிழகம் தவிர நாடு முழுவதும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தெரிவித்துள்ளார். 


நீட் தேர்வு முறை தமிழகம் தவிர நாடு முழுவதும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தெரிவித்துள்ளார். 
வேதாரண்யத்தைச் சேர்ந்த தோப்புத்துறை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் (இந்து) கணினிவழி திறன் வகுப்பு தொடக்க விழா சனிக்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்று வகுப்பைத் தொடங்கி வைத்த கைத்தறி மற்றும் துணிநூல்துறை அமைச்சர் ஓ.எஸ். மணியன் மேலும் பேசியது:
நீட் தேர்வு முறையை தமிழகத்தில் ஏற்கக் கூடாது என பலர் தெரிவித்து வருகின்றனர். இதனால் ஒரு தேக்க நிலை இருந்தது. ஆனால், தற்போது தமிழகத்தில் 48.5 சதவீதம் மாணவர்கள் வெற்றி பெற்றுள்ளனர். அடுத்த இரண்டு ஆண்டுகளில் இந்த தேர்ச்சி விழுக்காடு அதிகரித்து, பிற மாநிலங்களுக்கு போட்டியாக அமையும்.
கல்வி வளர்ச்சிக்காக தமிழக அரசு நிகழாண்டில் ரூ.28 ஆயிரம் கோடியை ஒதுக்கீடு செய்துள்ளது. அரசுப் பள்ளி மாணவர்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டு வருகின்றன என்றார் அமைச்சர்.
நிகழ்ச்சிக்கு, பெற்றோர்- ஆசிரியர் கழகத் தலைவர் நாகூரான் தலைமை வகித்தார். தலைமையாசிரியர் புயல் குமார் முன்னிலை வகித்தார். மாவட்டக் கல்வி  அலுவலர் வேதரெத்தினம், வட்டாரக் கல்வி அலுவலர் சிவகுமார், கூட்டுறவு சங்கத் தலைவர்கள் கிரிதரன், எழிலரசு, ராதாகிருஷ்ணன், நமச்சிவாயம், முஸ்லிம் ஜமாஅத் மன்றத் தலைவர் ஏ.ஆர்.சேக் அப்துல்லா, இந்து நற்பணி மன்றத் தலைவர் சிவகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com