நிலுவை ஊதியத்தை வழங்கக் கோரி சர்க்கரை ஆலை தொழிலாளர்கள் உண்ணாவிரதப் போராட்டம்

தலைஞாயிறு பகுதியில் உள்ள  சர்க்கரை ஆலையில் 11 மாத ஊதிய நிலுவையை உடனடியாக வழங்கக் கோரி

தலைஞாயிறு பகுதியில் உள்ள  சர்க்கரை ஆலையில் 11 மாத ஊதிய நிலுவையை உடனடியாக வழங்கக் கோரி அனைத்து தொழிலாளர்கள் சங்கம் சார்பில் செவ்வாய்க்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
மயிலாடுதுறை வட்டம், தலைஞாயிறு கிராமத்தில் நடிப்பிசைப் புலவர் கே.ஆர். ராமசாமி கூட்டுறவு சர்க்கரை ஆலை உள்ளது. நிர்வாக பிரச்னை காரணமாக இந்த சர்க்கரை ஆலை கடந்த 3 வருடங்களுக்கும் மேலாக இயங்காமல் உள்ளது.
இந்நிலையில், அனைத்து தொழிலாளர்கள் சங்கம் சார்பில், ஆலைத் தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்கள் இணைந்து  கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆலை நுழைவு வாயில் முன்பாக நடைபெற்ற இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் ஆலையில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு 2018- ஆண்டு ஜூலை மாதம் முதல் 2019 மே மாதம் வரை நிலுவையில் உள்ள ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும். ஆலைக்கு கரும்பு அனுப்பிய விவசாயிகளுக்கான நிலுவைத் தொகையை வழங்க வேண்டும். 2019-2020- ஆம் ஆண்டுக்கான கரும்பு அரவையை தொடங்க வேண்டும் ஆகிய 3 அம்சக் கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
சிஐடியு செயலாளர் ஐ. ஜெயபால் தலைமையில் நடைபெற்ற இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில், தொழிலாளர் முன்னேற்ற சங்கத் தலைவர் டி. குமார், செயலாளர் பி. மோகன், ஐஎன்டியுசி செயலாளர் டி. பரமானந்தம், துணைச் செயலாளர் விமல், பாட்டாளி தொழிற்சங்க செயலாளர் குபேந்திரன், ஊழியர் நலச் சங்கத் தலைவர் ஜெயகாந்தன், அனைத்துப் பணியாளர் பேரவை தலைவர் ஜெயப்பிரகாசம், பொதுத் தொழிலாளர் சங்க செயலாளர் நடராஜ், அம்பேத்கர் தொழில்சங்கத் தலைவர் செல்வராஜ், செயலாளர் மெய்யழகன், தேமுதிக சங்க செயலாளர் சுப்பிரமணியன், ஏஐடியுசி சங்க செயலாளர் எஸ். கமலநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com