கிராம சபை குறித்த விழிப்புணர்வுக் கூட்டம்
By DIN | Published On : 25th June 2019 09:49 AM | Last Updated : 25th June 2019 09:49 AM | அ+அ அ- |

வேதாரண்யத்தை அடுத்த செம்போடையில் கிராம சபை குறித்த விழிப்புணர்வு பிரசாரக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
செம்போடை வாழ்முனீசுவரர் கோயில் வளாகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு சட்ட பஞ்சாயத்து இயக்கம் ஏற்பாடு செய்திருந்தது. இதில், ஊழலற்ற ஊராட்சி நிர்வாகத்தை செயல்படுத்துவது எப்படி? என்பது குறித்த பயிற்சி மற்றும் கலந்துரையாடல் நடைபெற்றது.
சட்ட பஞ்சாயத்து இயக்கத் தலைவர் சிவ.இளங்கோ, பொதுச் செயலாளர் செந்தில் ஆறுமுகம், நாகை மாவட்டபொறுப்பாளர்கள் எம். ராஜேந்திரன், ப. நந்தகுமார், அன்பு, மணிவண்ணன் மற்றும் தன்னார்வலர்கள் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.