போலீஸார்- பொதுமக்கள் நல்லுறவு விழிப்புணர்வு நிகழ்ச்சி

மயிலாடுதுறை இருப்புப் பாதை காவல் நிலையத்தில், போலீஸார்- பொதுமக்கள் இடையே நல்லுறவை ஏற்படுத்தும் விதமாக கூறைநாடு, கிட்டப்பா


மயிலாடுதுறை இருப்புப் பாதை காவல் நிலையத்தில், போலீஸார்- பொதுமக்கள் இடையே நல்லுறவை ஏற்படுத்தும் விதமாக கூறைநாடு, கிட்டப்பா நகராட்சி மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி சனிக்கிழமை நடத்தப்பட்டது.
இதில், பல்வேறு விதமான துப்பாக்கிகளைக் கையாளும் விதம் குறித்து சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், மாணவ, மாணவியருக்கு செயல் விளக்கம்
அளித்தார்.
மேலும், பெண்கள், முதியோர்களுக்கு எதிராக நடக்கும் குற்றச் சம்பவங்களைத் தடுத்து, பாதுகாப்பு ஏற்படுத்தும் நோக்கத்துடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள காவலன் செயலியை, செல்லிடப்பேசியில் பதிவிறக்கம் செய்து, பயன்படுத்தும் முறை குறித்து விளக்கம்அளிக்கப்பட்டது.
இருப்புப் பாதை காவல் நிலைய ஆய்வாளர் வி.எஸ். சிவவடிவேல் தலைமை வகித்தார். கிட்டப்பா நகராட்சி மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர்கள் ஜி. பாஸ்கரன், சி.செல்லதுரை, உடற்கல்வி ஆசிரியை வி.விமலா ஆகியோர் முன்னிலை வகித்தனர். ரயில் நிலைய மேலாளர் மனோகரன் ரயில்வே போக்குவரத்து விதிமுறைகள் குறித்து விளக்கினார். இதில், தலைமைக் காவலர்கள் ஐயப்பன், பதி, தர்மராஜன், செந்தில், அனிதா ஆகியோர் கலந்துகொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com