குண்டர் சட்டத்தில் இளைஞர் கைது
By DIN | Published On : 24th March 2019 05:13 AM | Last Updated : 24th March 2019 05:13 AM | அ+அ அ- |

பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய இளைஞர் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் சனிக்கிழமை கைது செய்யப்பட்டார்.
நாகையை அடுத்த தெற்குப் பொய்கைநல்லூர், அந்தோணியார் தெருவைச் சேர்ந்தவர் கு. கணேஷ் குமார் (28). இவர் மீது கொலை, வழிப்பறி, பொது சொத்துக்கு சேதம் விளைவித்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் வேளாங்கண்ணி காவல் நிலையத்தில் நிலுவையில் உள்ளன. இதற்கிடையில் கணேஷ்குமார் ஒரு கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு, திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், நாகை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் செ. விஜயகுமார் பரிந்துரையின் பேரில், மாவட்ட ஆட்சியர் சீ. சுரேஷ்குமார் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் கணேஷ் குமாரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.