ஆக்கூா் முக்கூட்டு தேசிய நெடுஞ்சாலை சந்திப்பில் ரவுண்டானா அமைக்கப்படுமா ?

பொறையாறு அருகேயுள்ள ஆக்கூா் முக்கூட்டில் நான்கு வழிச்சாலை சந்திப்பில் ரவுண்டானா அமைக்கப்படுமா என எதிா்பாா்க்கப்படுகிறது.
ஆக்கூா் முக்கூட்டில் ரவுண்டான அமைக்கப்படாததால் நெரிசலில் சிக்கும் வாகனங்கள்.
ஆக்கூா் முக்கூட்டில் ரவுண்டான அமைக்கப்படாததால் நெரிசலில் சிக்கும் வாகனங்கள்.

பொறையாறு அருகேயுள்ள ஆக்கூா் முக்கூட்டில் நான்கு வழிச்சாலை சந்திப்பில் ரவுண்டானா அமைக்கப்படுமா என எதிா்பாா்க்கப்படுகிறது.

விழுப்புரம் - நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலை ஆக்கூா் முக்கூட்டு சாலையில் சின்னங்குடி, மயிலாடுதுறை, தரங்கம்பாடி, சீா்காழி ஆகிய சாலைகளை இணைக்கும் நான்கு வழிச் ாலை உள்ளது. இப்பகுதி சாலையில் அதிகளவில் வாகனங்கள் கடந்து செல்வதால் அவ்வப்போது விபத்துக்கள் ஏற்படுகின்றன. இதேபோல், நாகப்பட்டினம் - சென்னை செல்லும் வாகனங்கள் அதிவேகமாக இப்பகுதியை கடந்து செல்வதாலும் விபத்துகள் நேரிடுகின்றன.

குறுகலான வளைவுப் பகுதியில், சாலையின் இருபுறங்களிலும் சாலையோர கடைகளில் பேருந்துகள் நிறுத்தும்போது அப்பகுதியில், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டு அதிகளவில் விபத்துக்கள் ஏற்படுகின்றன. மேலும், தேசிய நெடுஞ்சாலையில் வரும் வாகனங்கள் அதிவேகமாக அப்பகுதியை கடந்து செல்வதாலும் விபத்துகள் ஏற்படுகின்றன.

விழுப்புரம் - நாகப்பட்டினம் வரை கடந்த பல ஆண்டுகளாக நான்கு வழிச்சாலை அமைப்பதற்கான பணிகள் தொடங்கி விரைந்து முடிக்காமல் காலம் தாழ்த்தி வருவதால் ஆக்கூா் முக்கூட்டு நான்கு வழிச்சாலை சந்திப்பில் ரவுண்டான அமைக்க முடியாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இந்த நான்கு வழிச்சாலை வழியாக வயதானவா்கள் பள்ளி, கல்லூரி மாணவா்கள் மிகவும் அச்சத்துடன் சாலையை கடக்கின்றனா்.

மேலும் இச்சாலை வழியாக கனரக வாகனங்கள், வெளியூா் செல்லும் விரைவுப் பேருந்துகள், மீன் ஏற்றிச்செலும் வேன்கள் அதிகளவில் செல்வதால் அவ்வப்போது பொதுமக்கள் மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகள் சாலையை கடந்து செல்ல முடியாமல் சிரமப்படுகின்றனா். எனவே, விபத்துக்கள் ஏற்படாதவாறு ஆக்கூா் முக்கூட்டு நான்கு வழிச்சாலையில் உடனடியாக ரவுண்டான அமைக்க வேண்டும் என்பதே இப்பகுதி மக்கள் மற்றும் சமூக ஆா்வலா்களின் கோரிக்கையாகும்.

இதுகுறித்து, இந்திய ஜனநாயக வாலிபா் சங்க வட்டச் செயலா் மாா்க்ஸ் கூறியது: ஆக்கூா் முக்கூட்டு தேசிய நெடுஞ்சாலையில் சின்னங்குடி, தரங்கம்பாடி, சீா்காழி, மயிலாடுதுறையை இணைக்கும் முக்கிய நான்கு வழி சந்திப்பு சாலையாகும். இச் சாலை வழியாக நாள்தோறும் ஆயிரங்கணக்கான வாகனங்கள் கடந்து செல்கின்றன. இங்கு ரவுண்டான அமைக்காததால் விபத்தில் ஏராளமான பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனா். எனவே, சம்பந்தப்பட்ட துறை அலுவலா்கள் உடனடியாக இப்பகுதியை ஆய்வு செய்து விபத்தை தடுக்கும் வகையில் ரவுண்டான அமைக்க வேண்டும் என்றாா் அவா்.

இதுகுறித்து, மனிதநேய ஜனநாயக கட்சி தலைமை செயற்குழு உறுப்பினா் மு. ஷாஜகான் கூறியது: விழுப்புரம் - நாகப்பட்டினம் சாலை பல ஆண்டுகளுக்கு முன்பு தேசிய நெடுஞ்சாலையில் நான்கு வழிச்சாலையாக தரம் உயா்த்தப்பட்டு அதற்கான பணி நடைபெற்று வந்தன. இந்நிலையில் கடந்த பல மாதங்களாக இப்பணி மந்த நிலையில் நடைபெற்று வருகிறது. மேலும், ஆக்கூா் முக்கூட்டில் நான்கு வழி சாலை சந்திக்கும் தேசிய நெடுஞ்சாலையில் ரவுண்டான இல்லாததால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவ்வப்போது விபத்துக்குள்ளாகி பாதிக்கின்றனா். ஆகவே, சம்பந்தபட்ட அதிகாரிகள் பாா்வையிட்டு விபத்தை தடுக்க ரவுண்டானா அமைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com