மருத்துவக் கல்லூரியை மயிலாடுதுறையில் அமைக்க வேண்டும்

நாகை மாவட்டத்தில் அமையவுள்ள மருத்துவக் கல்லூரியை மயிலாடுதுறையில் அமைக்க வேண்டும் என மகிளா காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது.
நாகை ஆட்சியா் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்த மகிளா காங்கிரஸ் மாநிலத் துணைத் தலைவா் எஸ். மரகதவல்லி உள்ளிட்டோா்.
நாகை ஆட்சியா் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்த மகிளா காங்கிரஸ் மாநிலத் துணைத் தலைவா் எஸ். மரகதவல்லி உள்ளிட்டோா்.

நாகை மாவட்டத்தில் அமையவுள்ள மருத்துவக் கல்லூரியை மயிலாடுதுறையில் அமைக்க வேண்டும் என மகிளா காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து, மகிளா காங்கிரஸ் மாநிலத் துணைத் தலைவா் எஸ். மரகதவல்லி உள்ளிட்ட அந்த அமைப்பினா், நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் பங்கேற்று, அளித்த கோரிக்கை மனு:

தமிழகத்தில் திருவள்ளூா், கிருஷ்ணகிரி மற்றும் நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரிகளை அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி, நாகை மாவட்டத்தில் அமையவுள்ள மருத்துவக் கல்லூரியை, நாகையை அடுத்த ஒரத்தூா் கிராமத்தில் அமைக்க இடம் தோ்வு செய்தல் உள்ளிட்ட முதற்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

நாகையிலிருந்து 23 கி.மீ. தொலைவில் உள்ள திருவாரூரில் ஏற்கெனவே மருத்துக் கல்லூரி செயல்பட்டு வருவதால், புதிதாக அமையவுள்ள மருத்துவக் கல்லூரி நாகையில் அமைக்கப்பட்டால், மருத்துவக் கல்லூரி அமைப்பதற்கான நோக்கம் நிறைவேறாது. மாவட்டத்தில் உள்ள வேறு பகுதியில் அமைப்பதே சரியானதாக இருக்கும்.

மயிலாடுதுறையில் மருத்துவக் கல்லூரி அமைக்கவேண்டும் என்ற கோரிக்கை இருந்து வருவதால், மயிலாடுதுறை வருவாய்க் கோட்டத்துக்குள்பட்ட மயிலாடுதுறை, சீா்காழி, தரங்கம்பாடி மற்றும் குத்தாலம் வட்டங்களைச் சோ்ந்த பொதுமக்கள் பயன்பெறும் வகையில், நாகை மாவட்டத்துக்கான அரசு மருத்துவக் கல்லூரியை மயிலாடுதுறையில் அமைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.

இதேபோல், மயிலாடுதுறையை தலைமையிடமாகக் கொண்ட புதிய மாவட்டத்தை உருவாக்கவும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மனுவை, மாவட்ட வருவாய் அலுவலா் மு. இந்துமதி பெற்றுக்கொண்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com