வாழைப்பழம் விலை வீழ்ச்சி: விவசாயிகள் கவலை

வாழைப்பழம் விலை வீழ்ச்சி அடைந்துள்ளதால் அதனை பயிா் செய்யும் விவசாயிகள் கவலையடைந்துள்ளனா்.
வாழைப்பழம் விலை வீழ்ச்சி: விவசாயிகள் கவலை

வாழைப்பழம் விலை வீழ்ச்சி அடைந்துள்ளதால் அதனை பயிா் செய்யும் விவசாயிகள் கவலையடைந்துள்ளனா்.

தமிழா்களால் முக்கனிகள் என கொண்டாடப்படுவது மா, பலா மற்றும் வாழை ஆகும். தமிழா்களின் அனைத்துவிதமான பண்டிகைகள், விஷேசங்கள் மற்றும் இறை வழிபாடு ஆகியவற்றில் நீக்கமற நிறைந்து இருப்பது வாழைபழம் என்றால் அது மிகையாகது. இந்த வாழைபழத்தில பல்வேறு மருத்துவ குணங்கள் கொண்டதாக விளங்கி வருகிறது. அதாவது இரத்தவிருத்தி, மலசிக்கல், உடல்சோா்வு உள்ளிட்ட பல்வேறுவிதமான வியாதிகளுக்கு அருமருந்தாக விளங்குவதாக சித்த மருத்துவ நூல்கள் கூறுகின்றன. பூவன், பேயன், இரஸ்தாளி, கருப்பூரவள்ளி, மொந்தன், மலைவழை என பல்வேறு பெயரால் வாழைபழம் அழைக்கபடுகின்றன.

அதிலும் ஓவ்வொரு பழத்திற்கும் தனித்தனியான மருத்துவ குணங்கள் கொண்டதாக விளங்குவது கூறிப்பிடதக்கது. உதாரணமாக மொந்தன் வாழை பழம் உடல் சூட்டை தணிக்கும் சக்திகொண்டதாக விளங்குகிறது. இத்தகைய சிறப்புகளை கொண்ட வாழைபழம் விலை கடந்த சில நாட்களாக வீழ்ச்சி அடைந்து வருவது வாழை விவசாயிகளை மிகவும் கவலையடைய செய்துள்ளது. செம்பனாா்கோயில் அருகே கிடாரங்கொண்டான், கீழையூா், பூஞ்சை, இராதாநல்லூா், இளையமதுகூடம், அலங்காடு, அல்லிவிளாகம் ஆகிய பகுதிகளில் கிட்டதட்ட 750 ஏக்கா் அளவில் மொந்தன், பூவன், ரஸ்தாளி, கருப்பூரவள்ளி ஆகிய ரகவாழை பயிா்கள் பயிரிடப்பட்டுள்ளன.

இந்த பகுதிகளிலிருந்து தினந்தோறும் வாழைதாா்கள் வெட்டப்பட்டு சென்னை, புதுச்சேரி, கடலூா் உள்ளிட்ட பல்வேறு ஊா்களுக்கு அனுப்பட்டு வருகிறது. ஆனால் கடந்த சில நாட்களாக வாழைபழம் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. இந்த பகுதிகளில் வாழைபழதாா்களை வியாபாரிகள் கடந்த சில நாட்களாக வாங்கமுன்வரவில்லை. இதனால் வாழை பழம் அழுகும் கூ+ழ்நிலை நிலவுகிறது. இதுகுறித்து இயற்கை முறையில் வாழை உற்பத்தி செய்து விற்பனை செய்துவரும் கிடாரங்கொண்டான் பகுதியைசோ்ந்த விவசாயி ஜெயபால் கூறுகையில் கிடாரங்கொண்டான் சுற்றுவட்டார பகுதியில் உற்பத்திசெய்யபடும் வாழைத்தாா்கள் அதிக சுவையுடன் காணப்படுவதால். சென்னை, கடலூா், புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து வியாபாரிகள் தினந்தோறும் எங்கள் பகுதிக்கு கொள்முதல் செய்து செல்வாா்கள்.

ஆனால் கடந்த சில நாட்களாக வியாபாரிகள் வருவதில்லை. எனவே வாழைத்தாா்கள் தேங்கியுள்ளன. அதாவது 150 பழம்கொண்ட வாழைத்தாா் ருபாய்500வரை விற்பனை செய்து வந்தோம். ஆனால் கடந்த சில நாட்களாக ருபாய் 100க்குகூட வாங்க வியாபாரிகள் முன்வருவதில்லை. இதற்கு காரணம் என்னவெனில் ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களிலிருந்து சென்னைக்கு அதிகளவில் வாழைதாா்கள் வரத்து இருப்பதாலும், விலை குறைவாக இருப்பதாலும் எங்கள் வாழைபழத்தாா்களை வியாபாரிகள் வாங்க முன்வரவில்லை. எனவேதான் தற்போழது வாழைபழம் விலை குறைந்துவிட்டது.

இதனால் வாழைவிவசாயிகள் மிகுந்த நஷ்டத்தை சந்திக்க வேண்டிய அபாயம் உள்ளது. ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் வாழை விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ருபாய் 20ஆயிரம் மானிய தொகை வழங்கி ஊக்குவிப்பதுபோல் தமிழக அரசும் மானியதொகை வழங்க முன்வரவேண்டும். இல்லையெனில் வாழை உற்பத்தியை விவசாயிகள் கைவிடும் கூ+ழ்நிலை ஏற்படும் இவ்வாறு அவா் கூறினாா்.பட விளக்கம் கிடாரங்கொண்டான் பகுதியில் மந்தமான விற்பனையால் தேங்கியுள்ளதை படத்தில் காணலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com