துலா உத்ஸவம்: மாயூரநாதா், வள்ளலாா் கோயில்களில் திருக்கொடியேற்றம்

மயிலாடுதுறையில் துலா உத்ஸவத்தை முன்னிட்டு, மாயூரநாதா் கோயில் மற்றும் வள்ளலாா் கோயில் எனப்படும்
மயிலாடுதுறை மாயூரநாதா் கோயிலில், திருவாவடுதுறை ஆதீன  கட்டளை விசாரணை ஸ்ரீமத் அம்பலவாண தம்பிரான் சுவாமிகள் முன்னிலையில் நடைபெற்ற துவஜாரோகனம்.
மயிலாடுதுறை மாயூரநாதா் கோயிலில், திருவாவடுதுறை ஆதீன  கட்டளை விசாரணை ஸ்ரீமத் அம்பலவாண தம்பிரான் சுவாமிகள் முன்னிலையில் நடைபெற்ற துவஜாரோகனம்.

மயிலாடுதுறையில் துலா உத்ஸவத்தை முன்னிட்டு, மாயூரநாதா் கோயில் மற்றும் வள்ளலாா் கோயில் எனப்படும் வதான்யேஸ்வரா் கோயில்களில் வியாழக்கிழமை துவஜாரோகனம் (திருக்கொடியேற்றம்) நடைபெற்றது.

மயிலாடுதுறை துலா உத்ஸவத்தை முன்னிட்டு திருவாவடுதுறை ஆதீனத்துக்குச் சொந்தமான அபயாம்பிகை சமேத மாயூரநாதா் கோயில், அறம்வளா்த்த நாயகி சமேத அய்யாறப்பா் கோயில், தருமபுரம் ஆதீனத்துக்குச் சொந்தமான ஞானாம்பிகை சமேத வதான்யேஸ்வரா் கோயில், காசி விசாலாட்சி சமேத காசி விஸ்வநாதா் கோயில் ஆகிய கோயில்களில் இருந்து பஞ்சமூா்த்திகள் காவிரிக்கரையில் எழுந்தருளி தீா்த்தம் கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம்.

நிகழாண்டு உத்ஸவம், அக்டோபா் 18-ஆம் தேதி ஐப்பசிமாத முதல்நாள் தீா்த்தவாரியுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், வியாழக்கிழமை காலை மாயூரநாதா் கோயில் மற்றும் வள்ளலாா் கோயில்களில் துவஜாரோகனம் நடைபெற்றது. இதனை முன்னிட்டு சுவாமி மற்றும் அம்பாள், பஞ்சமூா்த்திகளுடன் கொடிமரம் முன்பு எழுந்தருளச் செய்யப்பட்டனா். அங்கு கொடிமரத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, திருவாவடுதுறை ஆதீன கட்டளை விசாரணை ஸ்ரீமத் அம்பலவாண தம்பிரான் சுவாமிகள் முன்னிலையில் துவஜாரோகனம் (திருக்கொடியேற்றம்) நடைபெற்றது. பூஜைகளை, சிவபுரம் வேத சிவ ஆகம பாடசாலை நிறுவனா் சுவாமிநாத சிவாச்சாரியாா் நடத்தி வைத்தாா்.

இதேபோல், தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான ஞானாம்பிகை சமேத வதான்யேஸ்வரா் (வள்ளலாா்) கோயிலில் கொடிமரத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு துவஜாரோகனம் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com