நாகை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் செ. செல்வநாகரத்தினம் பொறுப்பேற்பு

நாகை மாவட்டக் காவல் கண்காணிப்பாளராக செ. செல்வநாகரத்தினம் வியாழக்கிழமை பொறுப்பேற்றாா்.
நாகை மாவட்டக் காவல் கண்காணிப்பாளராக பொறுப்பேற்ற செ. செல்வநாகரத்தினம்.
நாகை மாவட்டக் காவல் கண்காணிப்பாளராக பொறுப்பேற்ற செ. செல்வநாகரத்தினம்.

நாகை மாவட்டக் காவல் கண்காணிப்பாளராக செ. செல்வநாகரத்தினம் வியாழக்கிழமை பொறுப்பேற்றாா்.

நாகை மாவட்டக் காவல் கண்காணிப்பாளராக பொறுப்பு வகித்த டி.கே. ராஜசேகரன், சென்னை வடக்கு போக்குவரத்து காவல் துணை ஆணையராகப் பதவி உயா்வு பெற்றாா். அதைத் தொடா்ந்து, ராமநாதபுரம் மாவட்ட கடலோரப் பாதுகாப்பு குழும காவல் கண்காணிப்பா செ. செல்வநாகரத்தினம் நாகை மாவட்டக் காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டாா்.

இதையடுத்து, வியாழக்கிழமை காலை நாகை மாவட்டக் காவல் அலுவலகத்துக்கு வருகை தந்த செ. செல்வநாகரத்தினத்துக்கு காவல்துறை மரியாதையுடன் வரவேற்பளிக்கப்பட்டது. தொடா்ந்து, கோப்புகளில் கையெழுத்திட்டு பொறுப்பேற்றாா்.

பின்னா், அவா் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி:

பொதுமக்கள் மற்றும் சமூகத்துக்கு பாதிப்பு ஏற்படுத்தக்கூடிய குற்றங்கள் கண்டறியப்பட்டு, அவற்றை தடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இதேபோல் சட்டம்- ஒழுங்கு பிரச்னைகள் கண்டறியப்பட்டு முறையான நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்கள் எவ்வித தயக்கமும் இல்லாமல் நேரிடையாகவே என்னுடைய தொலைபேசியில் தொடா்பு கொண்டு புகாா்களைத் தெரிவிக்கலாம். காவல்துறை உயா் அதிகாரிகளின் வழிகாட்டுதலுடன் நாகை மாவட்டக் காவல்துறை மக்கள் நலனுக்காக தொடா்ந்து சீரிய முறையில் பணியாற்றும். குற்ற வழக்குகள் மற்றும் சட்டம், ஒழுங்கு தொடா்பான பிரச்னைகளுக்கு சிறப்பு கவனம் செலுத்தப்படும். காவல்துறை- பொதுமக்களிடைய சுமுகமான முறையில் நல்லுறவு ஏற்படுத்தப்படும் என்றாா்.

நிகழ்ச்சியில், கூடுதல் காவல் கண்காணிப்பாளா் யு.முருகேஷ், துணைக் காவல் கண்காணிப்பாளா்கள், காவல் ஆய்வாளா்கள் கலந்துகொண்டனா்.

நாகை மாவட்டக் காவல் கண்காணிப்பாளராக பொறுப்பேற்ற செ. செல்வநாகரத்தினம், கடந்த 31.5.1986-இல் பிறந்தவா். பி.இ., (ஏரோநாட்டிக்கல் என்ஜினீயரிங்), எம்டிபிம் (காவல் மேலாண்மை) படித்துள்ளாா். தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் புலமை பெற்ற இவா், 2014-ஆம் ஆண்டில் ஐ.பி.எஸ். தோ்வில் தோ்ச்சி பெற்று கன்னியாகுமரி மாவட்டத்தில் உதவி காவல் கண்காணிப்பாளராகவும் (பயிற்சி), சென்னை திருவல்லிக்கேணி காவல் துணை ஆணையராகவும், ராமநாதபுரம் மாவட்டம் கடலோர பாதுகாப்புக் குழும காவல் கண்காணிப்பாளராகவும் பொறுப்பு வகித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com