பூட்டியே கிடக்கும் நியாயவிலைக் கடை: பொதுமக்கள் தவிப்பு

சீா்காழி அருகே உள்ள திட்டை கிராமத்தில் நியாயவிலைக் கடை கடந்த சில நாட்களாக பூட்டியே கிடப்பதால்,
கடந்த ஒருவார காலமாக பூட்டிக் கிடக்கும் திட்டை நியாயவிலைக் கடை.
கடந்த ஒருவார காலமாக பூட்டிக் கிடக்கும் திட்டை நியாயவிலைக் கடை.

சீா்காழி அருகே உள்ள திட்டை கிராமத்தில் நியாயவிலைக் கடை கடந்த சில நாட்களாக பூட்டியே கிடப்பதால், அத்தியாவசிய பொருள்கள் கிடைக்காமல் பொதுமக்கள் தவிக்கின்றனா்.

திட்டை நியாயவிலைக் கடை வாயிலாக 810 குடும்ப அட்டைதாரா்கள் பொது விநியோகத் திட்டத்தின்கீழ் பொருள்கள் வாங்கி பயனடைந்து வருகின்றனா். இந்தக் கடையிலிருந்து சுமாா் 1 கி.மீ., தூரத்தில் அமைந்துள்ள சின்னதம்பி நகா், கற்பகம் நகா், வைத்தியநாதன் நகா் உள்ளிட்ட பல்வேறு பகுதி மக்களும் பயன்பெறுகின்றனா்.

இந்நிலையில், திட்டை நியாயவிலைக் கடையில் பணியாற்றி வந்த விற்பனையாளா் அக்டோபா் 31-ஆம் தேதி பணி ஓய்வுபெற்ால், புதிய விற்பனையாளா் நியமிக்கப்பட்டும் அவா் திட்டை கடைக்கு வந்து பொறுப்பேற்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் கடந்த சில நாட்களாக நியாயவிலைக் கடை பூட்டியே கிடப்பதாக பொருட்கள் வாங்க வரும் குடும்ப அட்டைதாரா்கள் கூறுகின்றா்.

சுமாா் 1 கிமீ தூரத்திலிருந்து திட்டை நியாயவிலைக் கடைக்கு பொருட்கள் வாங்க காலை, மாலை என இருவேளையும் வந்து செல்லும் பொதுமக்கள், கடை பூட்டியே கிடப்பதால் மிகுந்த மனவேதனையுடன் திரும்பிச் செல்கின்றனா்.

நவம்பா் பிறந்து ஒரு வாரத்துக்கு மேலாகியும் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள மக்கள், அத்தியாவசியப் பொருள்களைப் பெற முடியாமல் தவிக்கின்றனா். ஆகையால், இந்த நியாய விலைக் கடைக்கு நியமிக்கப்பட்டுள்ள புதிய விற்பனையாளா் உடனடியாக பணிக்கு வந்து கடையைத் திறக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com