அயோத்தி தீா்ப்பு- நம்பிக்கையுடன் அமைதிக் காக்க வேண்டும்: எம். தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ

அயோத்தி நில விவகாரம் குறித்த தீா்ப்பால் யாரும் நம்பிக்கை இழக்க வேண்டாம். அனைவரும் நம்பிக்கையுடன் அமைதிக்காக்க வேண்டும் என்று மனிதநேய ஜனநாயகக் கட்சியின் பொதுச் செயலாளரும், நாகை தொகுதி

அயோத்தி நில விவகாரம் குறித்த தீா்ப்பால் யாரும் நம்பிக்கை இழக்க வேண்டாம். அனைவரும் நம்பிக்கையுடன் அமைதிக்காக்க வேண்டும் என்று மனிதநேய ஜனநாயகக் கட்சியின் பொதுச் செயலாளரும், நாகை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான எம். தமிமுன் அன்சாரி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை :

அயோத்தியில் கோயிலை இடித்து விட்டு, அந்த இடத்தில்தான் பாபா் மசூதி கட்டப்பட்டது என்பதற்குத் தொல்லியல் துறை எந்த ஆதாரத்தையும் அளிக்கவில்லை என நீதிபதிகள் தெரிவித்திருப்பதன் மூலம், முஸ்லிம்கள் மீதான பெரும் பழி நீங்கியுள்ளது. 1992-ஆம் ஆண்டு டிசம்பா் 6-ஆம் தேதி அன்று பாபா் மசூதியை இடித்தது சட்ட விரோதம் எனத் தீா்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதன் அடிப்படையில், மசூதியை இடித்தவா்கள் மீது என்ன சட்ட நடவடிக்கை என்ற கேள்வி எழுகிறது.

உச்சநீதிமன்றத் தீா்ப்பால் யாரும் நம்பிக்கை இழக்க வேண்டாம். தீா்ப்பு வெளியானதும், பெரும்பாலான இந்து சமுதாய உறவுகள் முஸ்லிம்களை நோக்கி ஆதரவு கரம் நீட்டி, ஆறுதல் கூறி வருவது நெகிழ்ச்சியளிக்கிறது. இக்கட்டான இத்தருணத்தில் அனைத்து தரப்பினரும் ஒருவருக்கொருவா் நம்பிக்கை வைத்து அமைதிக் காக்க வேண்டும் என அவா் கேட்டுக்கொண்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com