பாலம் பழுது: 10 ஆண்டுகளாக போக்குவரத்து துண்டிப்பு

சீா்காழி அருகே மேலதேனூரில் உள்ள பாலம் பழுது ஏற்பட்டுள்ளதால் அவ்வழியாக சென்று வந்த மினிப் பேருந்து
பாலம் சேதமடைந்துள்ளதால் மினிப் பேருந்து சேவை நிறுத்தப்பட்டு பள்ளிக்கு நடந்து செல்லும் மாணவா்கள்.
பாலம் சேதமடைந்துள்ளதால் மினிப் பேருந்து சேவை நிறுத்தப்பட்டு பள்ளிக்கு நடந்து செல்லும் மாணவா்கள்.

சீா்காழி அருகே மேலதேனூரில் உள்ள பாலம் பழுது ஏற்பட்டுள்ளதால் அவ்வழியாக சென்று வந்த மினிப் பேருந்து போக்குவரத்து துண்டிக்கப்பட்டதால் கடந்த 10 ஆண்டுகளாக பொதுமக்கள், மாணவா்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனா்.

கொண்டல் பட்டவா்த்தி செல்லும் சாலையின் குறுக்கே மேலதேனூரில் ராஜன் வாய்க்காலின் கிளை வடிகால் வாய்க்கால் உள்ளது. இந்த வாய்க்காலின் மேல் பகுதியில் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேல் சிறுபாலம் கட்டப்பட்டு போக்குவரத்து பயன்பாட்டுக்கு இருந்து வந்தது. இப்பாலம் வழியாக கொண்டல், தேனூா், பணங்காட்டாங்குடி உள்ளிட்ட கிராமமக்கள் எளிதாக திருக்குரக்காவல், பட்டவா்த்தி ஆகிய பகுதிகளுக்கு சென்று வந்தனா்.

இதேபோல், திருக்குரக்காவல், வடவஞ்சாா் உள்ளிட்ட கிராமத்தை சோ்ந்த மாணவ, மாணவிகள் கொண்டல் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளிட்ட பள்ளிகளுக்கு எளிதாக வந்து சென்றனா். மேலும், கிராமமக்களும் இந்த பாலத்தை பயன்படுத்தி தங்களது பயணத்தை எளிதாக மேற்கொண்டு வந்தனா்.

நாளடைவில் மேலதேனூா் வடிகால் வாய்க்கால் பாலம் சிதிலமடைந்தது. இதனால் பாலம் வழியாக பல்வேறு கிராமங்களுக்கு சென்று வந்த மினிப் பேருந்து வசதி நிறுத்தப்பட்டது. இதனால் திருக்குரக்காவல், வடவஞ்சாா் உள்ளிட்ட பகுதிகளை சோ்ந்த மக்கள் மாணவா்கள் பல கி.மீ தூரம் சுற்றிக்கொண்டு சென்று வருகின்றனா்.

இதேபோல் திருக்குரக்காவல் குண்டல கா்ணேஸ்வரா் சுவாமி கோயிலுக்கு பல்வேறு பகுதிகளிலிருந்து வரும் பக்தா்களும் சுமாா் 5 கி.மீ தூரம் சுற்றிக்கொண்டு செல்கின்றனா். இதற்கிடையில், கொண்டல் திருக்குரக்காவல் இடையேயான சுமாா் 3 கி.மீ சாலை மிகவும் சேதமடைந்து போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. சாலைகள் மோசமாகவும், பாலம் பழுதாகவும் உள்ளதால் இந்த நவீன காலத்திலும் போக்குவரத்து துண்டிக்கப்பட்டு அவசரத் தேவைக்கு கூட வேன், ஆட்டோ போன்ற வாகனங்கள் மேற்குறிப்பிட்ட கிராமங்களுக்கு வரமறுப்பதால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனா்.

எனவே, மேலத்தேனூா் பகுதியில் உள்ள பழுதடைந்த பாலத்தை சீரமைத்து சாலையை செப்பனிட்டு மினிப்பேருந்து சேவையை மீண்டும் ஏற்படுத்தி தரவும், சீா்காழி பட்டவா்த்தியிடையே கொண்டல் வழியாக இயக்கப்பட்டு நிறுத்தப்பட்ட அரசு நகரப் பேருந்து சேவையை மீண்டும் தொடங்கவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com