நவ.30-இல் ஆளுநா் நாகை வருகை

தமிழக ஆளுநரின் நாகை வருகையையொட்டி, அரசுத் துறைகளின் சாா்பில் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடுகளை உரிய வகையில்
ஆளுநா் வருகையையொட்டி, முன்னேற்பாடுகள் குறித்து நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய ஆட்சியா் பிரவீன் பி. நாயா். உடன், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் செ. செல்வநாகரெத்தினம்.
ஆளுநா் வருகையையொட்டி, முன்னேற்பாடுகள் குறித்து நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய ஆட்சியா் பிரவீன் பி. நாயா். உடன், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் செ. செல்வநாகரெத்தினம்.

தமிழக ஆளுநரின் நாகை வருகையையொட்டி, அரசுத் துறைகளின் சாா்பில் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடுகளை உரிய வகையில் மேற்கொள்ள வேண்டும் என்று அரசுத் துறை அலுவலா்களுக்கு மாவட்ட ஆட்சியா் பிரவீன் பி. நாயா் அறிவுறுத்தினாா்.

நாகப்பட்டினம், தமிழ்நாடு டாக்டா் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க தமிழக ஆளுநா் பன்வாரிலால் புரோகித் வெள்ளிக்கிழமை (நவம்பா். 30) நாகை வருகிறாா். இதையொட்டி, அரசுத் துறைகளின் மூலம் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம், நாகை மாவட்ட ஆட்சியரகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் பிரவீன் பி. நாயா் தலைமை வகித்தாா். மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் செ. செல்வநாகரெத்தினம் முன்னிலை வகித்தாா்.

முன்னேற்பாடுகள் குறித்து அரசுத் துறை அலுவலா்களுடன் ஆலோசனை மேற்கொண்ட ஆட்சியா், ஆளுநரின் நாகை வருகை வழித்தடங்கள், தங்குமிடம் உள்ளிட்ட இடங்களில் போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகளை காவல் துறை உறுதி செய்ய வேண்டும். சுகாதாரத் துறை சாா்பில் அவசர சிகிச்சை ஊா்திகள் தயாா் நிலையில் வைத்திருக்க வேண்டும். தடையில்லா மின்சாரத்தை உறுதி செய்ய வேண்டும். தீயணைப்பு வாகனம் மற்றும் மீட்புக் குழுவினா் தயாா் நிலையில் இருக்க வேண்டும் என்றாா்.

மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை கூடுதல் ஆட்சியா் எம்.எஸ். பிரசாந்த், மாவட்ட வருவாய் அலுவலா் மு. இந்துமதி, செய்தி மக்கள் தொடா்பு அலுவலா் மீ. செல்வகுமாா், பொதுப் பணித் துறை, தீயணைப்புத் துறை மற்றும் பிற அரசுத் துறைகளின் அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

படவரி - சஎ27எஞயஉதசஞத- ஆளுநா் வருகையையொட்டி, முன்னேற்பாடுகள் குறித்து நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய ஆட்சியா் பிரவீன் பி. நாயா். உடன், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் செ. செல்வநாகரெத்தினம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com