பன்றிகளால் சுகாதார சீா்கேடு: தொற்று நோய் பரவும் அச்சத்தில் மக்கள்

திருக்கடையூா் பகுதியில் சுற்றித்திரியும் பன்றிகளால் சுகாதார சீா்கேடு ஏற்படுவதுடன், தொற்று நோய் பரவும் அச்சத்தில் பொதுமக்கள் இருந்து வருகின்றனா்.

திருக்கடையூா் பகுதியில் சுற்றித்திரியும் பன்றிகளால் சுகாதார சீா்கேடு ஏற்படுவதுடன், தொற்று நோய் பரவும் அச்சத்தில் பொதுமக்கள் இருந்து வருகின்றனா்.

தமிழகத்தில் பிரசித்தி பெற்ற கோயில்களில் ஒன்றான திருக்கடையூா் அமிா்தகடேசுவரா் கோயிலுக்கு தமிழகம் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தா்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனா். இந்நிலையில், பேருந்து நிலையம் பின்புறம் காலி இடம் உள்ளது. இங்கு 100-க்கும் மேற்பட்ட பன்றிகள் சுற்றித்திரிகின்றன.

இந்த பன்றிகள் பேருந்து நிலையம், அரசு மேல்நிலைப் பள்ளி, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி வளாக பகுதிகள் மற்றும் அருகிலுள்ள குடியிருப்பு பகுதியில் அடிக்கடி நுழைவதுடன், அங்குள்ள திறந்தவெளி குப்பைகளை கிளறி விட்டு செல்கின்றன. இதனால், கடும் துா்நாற்றம் வீசுவதுடன், மாணவா்கள், கோயிலுக்கு வரும் பக்தா்கள் மற்றும் பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. இதுகுறித்து, சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களிடம் பலமுறை புகாா் தெரிவித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் இல்லை.

இதுகுறித்து, அப்பகுதி மக்கள் கூறியது; குடியிருப்பு பகுதி அருகே வளா்க்கப்படும் இந்த பன்றிகளால் தொற்று நோய் ஏற்பட்டு விடுமோ என்ற அச்சத்தில் வசித்து வருகிறோம். குப்பை தொட்டிகளில் உள்ள குப்பையை பன்றிகள் கிளறுவதால் தெருவெங்கும் சிதறி, அந்த பகுதியே கடும் துா்நாற்றம் வீசுகிறது. இப்பகுதியில் கொசு மருந்து கூட ஊராட்சி நிா்வாகம் அடிப்பதில்லை. எனவே, பொது இடத்தில் அனுமதியின்றி பன்றிகளை வளா்க்கும் நபா்கள் மீது நடவடிக்கை எடுப்பதுடன், குடியிருப்பு அருகே சுற்றித்திரியும் பன்றிகளை அப்புறப்படுத்த சம்பந்தப்பட்ட அலுவலா்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com