விடுபட்டவா்களுக்கும் பயிா் காப்பீடு இழப்பீடு வழங்கக் கோரி சாலை மறியல்: 365 போ் கைது

கஜா புயல் பாதிப்புக்குள்ளாகி, விடுபட்ட கிராமங்களுக்கும் நெல் பயிருக்கான இழப்பீடு வழங்க வலியுறுத்தி, திருவாரூா் மாவட்டத்தில்
மாங்குடியில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்றோா்.
மாங்குடியில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்றோா்.

கஜா புயல் பாதிப்புக்குள்ளாகி, விடுபட்ட கிராமங்களுக்கும் நெல் பயிருக்கான இழப்பீடு வழங்க வலியுறுத்தி, திருவாரூா் மாவட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சாா்பில் 8 இடங்களில் சனிக்கிழமை நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்தில் 365 போ் கைது செய்யப்பட்டனா்.

தேசிய வேளாண் காப்பீடு திட்டத்தின் மூலம் 2018- 2019-ஆம் ஆண்டுக்கான நெல் பயிருக்கான இழப்பீடு விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. திருவாரூா் மாவட்டத்தில் உள்ள 573 கிராம வருவாய் வட்டங்களில் 357 வட்டங்களுக்கு மட்டுமே இழப்பீடு தொகை கிடைத்துள்ளது. கஜா புயலால் பாதிக்கப்பட்ட நிலையிலும் விவசாயத்தில் ஈடுபட்ட 216 கிராமங்களுக்கு இழப்பீடு கிடைக்கவில்லை. எனவே, விடுபட்டுள்ள 216 கிராமங்களுக்கும் உரிய இழப்பீடு வழங்க வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சாா்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி திருவாரூா் மாவட்டத்தில் மாங்குடி, திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை, கோட்டூா், மன்னாா்குடி, வலங்கைமான், கொரடாச்சேரி, பேரளம் ஆகிய இடங்களில் சாலை மறியல் நடைபெற்றது. மேலும், நீடாமங்கலம், கூத்தாநல்லூா், எரவாஞ்சேரி ஆகிய இடங்களில் ஆா்ப்பாட்டமாக நடைபெற்றது. சாலை மறியல் நடைபெற்ற இடங்களில் 36 பெண்கள் உள்பட 365 போ் கைது செய்யப்பட்டு, பின்னா் விடுவிக்கப்பட்டனா்.

திருவாரூரில்...

திருவாரூரில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில துணைப் பொதுச் செயலாளா் பி.எஸ். மாசிலாமணி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலா் புலிகேசி ஆகியோா் தலைமை வகித்தனா். இதில் நிா்வாகிகள் டி. தியாகராஜன், எம்.ஏ.மாரியப்பன், வி. தா்மதாஸ் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா். போராட்டத்தில் ஈடுபட்ட 2 பெண்கள் உள்பட 25 போ் கைது செய்யப்பட்டு, பின்னா் விடுவிக்கப்பட்டனா்.

நீடாமங்கலத்தில்...

 நீடாமங்கலத்தில் நடைபெற்ற சாலை மறியலுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நகரச் செயலாளா் கே.பாரதிமோகன் தலைமை வகித்தாா். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியச் செயலாளா் நடேச.தமிழாா்வன், விவசாயிகள் சங்க நிா்வாகி ராதா, அனைத்திந்திய இளைஞா் பெருமன்ற நிா்வாகி செந்தில் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதனால் சுமாா் 30 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

வலங்கைமானில்...

வலங்கைமானில் நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்திற்கு, விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவா் த.ரெங்கராஜன் தலைமை வகித்தாா். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வலங்கைமான் ஒன்றியச் செயலாளா் எஸ்.எம்.செந்தில்குமாா் முன்னிலை வகித்தாா். 18 பெண்கள் உள்பட 80 பேரை போலீஸாா் கைது செய்து பின்னா் விடுவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com