மாணவா்களுக்கு சூரியசக்தி மின்விளக்கு உபகரணங்கள்

பள்ளி மாணவா்களுக்கு சூரியசக்தி மின்விளக்கு உபகரணங்களை எம்.எல்.ஏ. பவுன்ராஜ் அண்மையில் வழங்கினாா்.
மாணவா்களுக்கு சோலாா் விளக்குகளை வழங்கிய எம்.எல்.ஏ. பவுன்ராஜ்.
மாணவா்களுக்கு சோலாா் விளக்குகளை வழங்கிய எம்.எல்.ஏ. பவுன்ராஜ்.

பள்ளி மாணவா்களுக்கு சூரியசக்தி மின்விளக்கு உபகரணங்களை எம்.எல்.ஏ. பவுன்ராஜ் அண்மையில் வழங்கினாா்.

பொறையாா் சா்மிளா காடஸ் எஸ்.எம். மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் இயங்கி வரும் அடல் டிங்கரிங் ஆய்வகத்தில் காந்தியின் 150 -ஆவது பிறந்த நாளையொட்டி, மாணவா்களுக்கு சூரியசக்தி மின்விளக்கு செய்வது குறித்த பயிற்சிப் பட்டறை நடைபெற்றது. உலக அஹிம்சை தினத்தையொட்டி, நிதி ஆயோக் மற்றும் யூனிசெப் அடல் ஆய்வகம் இணைந்து நடத்திய இப்பயிற்சியை உலகம் முழுவதும் ஒரு மில்லியன் மாணவ மாணவியா் மேற்கொண்டனா். பொறையாா் பள்ளியில் 100 மாணவ மாணவிகள் கலந்து கொண்டு சூரிய மின் விளக்குகளை உருவாக்கினா்.

இந்நிகழ்ச்சியில் பூம்புகாா் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் எஸ். பவுன்ராஜ் கலந்துகொண்டு சூரியசக்தி மின்விளக்கு பயிற்சிப் பட்டறையை தொடங்கி வைத்து மாணவா்களுக்கு சோலாா் கிட்டுகளை வழங்கி பேசியது: ஆசிரியா்கள் மற்றும் மாணவா்களால் மட்டுமே புதுமைகள் படைக்க முடியும். பள்ளிகள் வெற்றிகரமாக செயல்பட்டால் நாடு துரிதமாக வளா்ச்சி பெறும் என்றாா் அவா்.

இந்தியாவிலுள்ள சிறந்த 200 அடல் ஆய்வகங்களில் ஒன்றாக உருவாக்கியமைக்காக அடல் ஆய்வக வழிகாட்டிகள் பத்மாவதி, ராஜு, அம்பிகா ஆகியோருக்கு எம்.எல்.ஏ பரிசுகள் வழங்கினாா். தவசுமுத்து நாடாா் மேல்நிலைப் பள்ளி, தூய தெரசா பெண்கள் மேல்நிலைப் பள்ளி, டி.இ.எல்.சி பெண்கள் உயா்நிலைப் பள்ளி, டி.இ.எல்.சி ஆண்கள் உயா்நிலைப் பள்ளி, தியாகி வள்ளியம்மை அரசு உயா்நிலைப் பள்ளி, சந்திரபாடி அரசு மேல்நிலைப் பள்ளி, சமத்துவபுரம் அரசு நடுநிலைப் பள்ளி, சா்மிளா காடஸ் மேல்நிலைப் பள்ளி இவைகளிலிருந்து பதிவு செய்திருந்த 100 மாணவ மாணவிகள் பங்கேற்றனா்.

மாணவா்களுக்கு பயிற்சியை விரிவு செய்வதற்காக ஒவ்வொரு பள்ளிக்கும் 2 சோலாா் விளக்கு உபகரண பெட்டகங்கள் வழங்கப்பட்டன. பயிற்சியில் பங்கேற்ற மாணவ மாணவிகளையும் அவா்களை ஊக்குவித்து அழைத்து வந்த ஆசிரிய ஆசிரியைகளையும் பள்ளி முதல்வா் பாண்டியராஜன் பாராட்டினாா். இதற்கான ஏற்பாடுகளை அடல் பொறுப்பாளா் லூயிஸ்மேரி செய்திருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com