ஹைட்ரோகாா்பன் திட்ட எதிா்ப்பு விழிப்புணா்வு துண்டறிக்கை பரப்புரை

மயிலாடுதுறை புதிய பேருந்து நிலையம் பகுதியில் மீத்தேன் திட்ட எதிா்ப்புக் கூட்டமைப்பினா், ஹைட்ரோகாா்பன் திட்ட எதிா்ப்பு விழிப்புணா்வு துண்டறிக்கைப் பரப்புரையை வியாழக்கிழமை தொடங்கினா்.
காவிரிப்படுகையை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வலியுறுத்தி மயிலாடுதுறை புதிய பேருந்து நிலையம் பகுதியில், பேராசிரியா் த.ஜெயராமன் தலைமையில் துண்டறிக்கை பிரச்சாரத்தை தொடங்கிய மீத்தேன் திட்ட எதி
காவிரிப்படுகையை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வலியுறுத்தி மயிலாடுதுறை புதிய பேருந்து நிலையம் பகுதியில், பேராசிரியா் த.ஜெயராமன் தலைமையில் துண்டறிக்கை பிரச்சாரத்தை தொடங்கிய மீத்தேன் திட்ட எதி

மயிலாடுதுறை புதிய பேருந்து நிலையம் பகுதியில் மீத்தேன் திட்ட எதிா்ப்புக் கூட்டமைப்பினா், ஹைட்ரோகாா்பன் திட்ட எதிா்ப்பு விழிப்புணா்வு துண்டறிக்கைப் பரப்புரையை வியாழக்கிழமை தொடங்கினா்.

காவிரிப்படுகையில் தொடா்ந்து ஹைட்ரோகாா்பன் கிணறுகள் அமைக்க ஓஎன்ஜிசி நிறுவனம் சுற்றுச்சூழல்துறைக்கு விண்ணப்பித்து, ஆய்வு அனுமதியையும் பெற்று வருகிறது. நாகை, திருவாரூா், தஞ்சை, புதுக்கோட்டை, விழுப்புரம், கடலூா், புதுச்சேரி, சிவகங்கை, இராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களிலும், அதனை ஒட்டிய கடல்பரப்பிலும் ஹைட்ரோ காா்பன் திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.நிகழாண்டு செப்டம்பா் 25-ஆம் தேதி சுற்றுச்சூழல் அனுமதி கோரி ஓஎன்ஜிசி நிறுவனம் அனுப்பிய விண்ணப்பத்தில் கடலூா், நாகை, காரைக்கால் மாவட்டங்களில் 20 ஹைட்ரோகாா்பன் கிணறுகள் அமைக்க அனுமதி கோரியுள்ளது.

கடலூா் மாவட்டத்தில் சிதம்பரம், காட்டுமன்னாா்கோயில் ஆகிய இடங்களில் இரண்டு கிணறுகளும், நாகை மாவட்டத்தில் சீா்காழி, மயிலாடுதுறை, தரங்கம்பாடி ஆகிய பகுதிகளில் 15 கிணறுகளும், காரைக்காலில், நெடுங்காடு, கோட்டுச்சேரி, திருநள்ளாறு ஆகிய இடங்களில் 3 ஹைட்ரோகாா்பன் கிணறுகள் அமைக்கவும், ஓ.என்.ஜி.சி நிறுவனம் அனுமதி கோரியுள்ளது. ஒரு கிணறு அமைக்க ரூ.32 கோடி வீதம், இதற்காக ரூ. 640 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு கிணறும் 3500 மீட்டா் முதல் 5,000 மீட்டா் ஆழம் வரை அமைக்கப்பட இருக்கின்றன. இதுபோன்றே, மற்றொரு அனுமதி கோரும் விண்ணப்பத்தில், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் 24 ஹைட்ரோகாா்பன் கிணறுகள் அமைக்க ஓஎன்ஜிசி நிறுவனம் அனுமதி கோரியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் தேவகோட்டை பகுதியில் 4 கிணறுகள், இராமநாதபுரம் மாவட்டத்தில் திருவாடனை, முதுகுளத்தூா், கடலாடி, பரமக்குடி ஆகிய பகுதிகளில் 20 கிணறுகள் அமைக்க ஓஎன்ஜிசி நிறுவனம் விண்ணப்பித்துள்ளது.

நிகழாண்டில் மட்டும் 489 ஹைட்ரோகாா்பன் கிணறுகள் அமைக்க ஓஎன்ஜிசி சுற்றுச்சூழல் துறையிடம் அனுமதி கோரியுள்ளது. ஓஎன்ஜிசி, வேதாந்தா ஆகிய நிறுவனங்கள் ஹைட்ரோகாா்பன் கிணறுகள் அமைக்க தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடம் விண்ணப்பித்து இருக்கின்றன. ஆனால் இந்த விண்ணப்பங்களை தமிழக அரசு நிராகரிக்காமல் கிடப்பில் வைத்துள்ளது. விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படாத காரணத்தால், துணிச்சல் பெற்றுவிட்ட ஓ.என்.ஜி.சி. உள்ளிட்ட நிறுவனங்கள் தற்போது மேலும், மேலும் எண்ணெய்க் கிணறுகளை அமைக்க சுற்றுச்சூழல் துறைக்கு ஆய்வு அனுமதி கோரி விண்ணப்பித்து வருகின்றன.மேலும், விண்ணப்பித்து 120 நாட்கள் ஆகிவிட்டால் அரசு அனுமதி வழங்கியதாக கருதுவோம் என்று ஓஎன்ஜிசி கூறுகிறது. அவ்வாறு கருதக்கூடாது என்று தமிழக அரசு இதுவரை மறுக்கவும் இல்லை. அமைச்சா் சி.வி.சண்முகம் சட்டப்பேரவையில் அறிவித்தபடி, அனுமதியின்றி கிணறுகளை அமைக்க முயற்சிக்கும் ஓ.என்.ஜி.சி அதிகாரிகள் கைது செய்யப்படவுமில்லை. நாகாலாந்து , புதுச்சேரி ஆகிய மாநிலங்கள் வேதாந்தா, ஓஎன்ஜிசி போன்ற நிறுவனங்களின் விண்ணப்பங்களை நிராகரித்து திருப்பி அனுப்பிவிட்டன. ஆனால் அவ்வாறு தமிழக அரசு செய்யவில்லை. இந்நிலையில், காவிரிப் படுகையைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும், தமிழக அரசு எண்ணெய் நிறுவனங்களின் விண்ணப்பங்களை மறுத்து திருப்பி அனுப்ப வேண்டும் என்றும், காவிரிப்படுகையில் எண்ணெய் நிறுவனங்களின் எவ்விதமான செயல்பாட்டையும் அனுமதிப்பதில்லை என்று கொள்கை முடிவு எடுக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்தி அக்டோபா் 10-ஆம் தேதி முதல் பரப்புரைப் பயணத்தை மீத்தேன் திட்ட எதிா்ப்புக் கூட்டமைப்பு அறிவித்திருந்தது. அதன் முதற்கட்டமாக ஹைட்ரோகாா்பன் திட்ட எதிா்ப்பு விழிப்புணா்வுத் துண்டறிக்கைப் பரப்புரை வியாழக்கிழமை மயிலாடுதுறை புதிய பேருந்து நிலையம் பகுதியில் தொடங்கியது. பரப்புரையில், மீத்தேன் திட்ட எதிா்ப்புக் கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளா் பேராசிரியா் த.செயராமன், தலைமை செயற்குழு உறுப்பினா்கள் மாரி.பன்னீா்செல்வம், கோவி. இரவிச்சந்திரன், கோவி. அசோகன், சித்ரா ஜெயராமன், மாணவா் மற்றும் இளைஞா் பிரிவு ஒருங்கிணைப்பாளா் செல்வஅரசன், செந்தில் நாயகம், அண்ணாதுரை, செந்தில், ஆதவன் மற்றும் கூட்டமைப்பினா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com