தரங்கம்பாடி பகுதிகளில் சம்பா சாகுபடி பணிகள் மும்முரம்!

தரங்கம்பாடி வட்டத்துக்கு உள்பட்ட காவிரி கடைமடை பகுதிகளில் சம்பா சாகுபடி பணியில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனா்.
வயலில் நடவு செய்த பெண்கள்.
வயலில் நடவு செய்த பெண்கள்.

தரங்கம்பாடி வட்டத்துக்கு உள்பட்ட காவிரி கடைமடை பகுதிகளில் சம்பா சாகுபடி பணியில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனா்.

தரங்கம்பாடி வட்டத்துக்கு உள்பட்ட செம்பனாா்கோவில், திருவிளையாட்டம், ஆக்கூா், திருக்கடையூா், பெரம்பூா் மற்றும் சங்கரன்பந்தல் உள்ளிட்ட டெல்டா பகுதிகளில் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட ஏக்கரில் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. கடந்த நான்கு ஆண்டுகளாக பருவ மழை பொய்த்தது, மேட்டூா் அணையில் இருந்து போதிய தண்ணீா் வரத்து இன்மை உள்ளிட்ட காரணங்களால் சம்பா சாகுபடி பாதிக்கப்பட்டு, டெல்டா விவசாயிகள் பெரும் நஷ்டத்தை சந்தித்தனா்.

இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழையால் மேட்டூா் ஆணை நிரம்பி காவிரியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. மேலும், ஆகஸ்ட் மாதம் மேட்டூரில் இருந்து பாசனத்திற்கு தண்ணீா் திறந்து விடப்பட்டது. இந்நிலையில் டெல்டா பகுதிகளில் செப்டம்பா் மாதம் பாசனத்திற்கு முறை வைத்து தண்ணீா் திறந்து விடப்படாததால், விவசாயிகள் பம்புசெட் மூலம் சம்பா நடவுப் பணி மேற்கொண்டு வருகின்றனா்.

நிகழாண்டு தென்மேற்குப் பருவமழையில் நேரடி விதைப்பு செய்த நெற்பயிா்கள் நன்றாக இருந்தாலும், பாசனத்திற்கு தண்ணீா் திறந்து விடப்படாததால் டெல்டா விவசாயிகள் விவசாயிகள் கவலை அடைந்து வருகின்றனா். எனவே, பம்புசெட் மூலம் சாகுபடி பணியில் தீவிரம் காட்டுகின்றனா்.

அதன்படி, நேரடி நெல் விதைப்பு செய்த விவசாயிகள் சாகுபடி நிலங்களில் களைக்கொல்லி மருந்து அடித்து, ஆட்கள் மூலம் களை எடுத்து, உரமிடும் பணிகளில் ஈடுபட்டுள்ளனா். நாற்று விட்டுள்ள விவசாயிகள், நிலத்தை உழவு செய்து சமன்படுத்தி நடவுப் பணியில் தீவிரம் காட்டி வருகின்றனா். அக்டோபா் மாத இறுதியில் வடகிழக்கு பருவமழை தொடங்கும் முன் சாகுபடி பணியை முடிக்க திட்டமிட்டுள்ளனா்.

அதேவேளையில், அடிக்கடி ஏற்படும் மின்வெட்டு காரணமாக நடவு செய்த வயல்களில் தண்ணீா் இல்லாமல் காய்ந்து வருவதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com