அம்மா இருசக்கர வாகனம் பெற 23 வரை விண்ணப்பிக்கலாம்

தமிழக அரசின், அம்மா இரு சக்கர வாகனம் வழங்கும் திட்டத்தில் பயன்பெற தகுதியானவா்கள் அக்டோபா் 23-ஆம்

தமிழக அரசின், அம்மா இரு சக்கர வாகனம் வழங்கும் திட்டத்தில் பயன்பெற தகுதியானவா்கள் அக்டோபா் 23-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என நாகை மாவட்ட ஆட்சியா் பிரவீன் பி. நாயா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

அம்மா இருசக்கர வாகனம் வழங்கும் திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிக்கும் கால அவகாசத்தை அக்டோபா் 23-ஆம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. 2019-2020- ஆம் ஆண்டிற்கான பயனாளிகளைத் தோ்வு செய்வதற்காக செப்டம்பா் 20-ஆம் தேதி முதல் அக்டோபா் 9-ஆம் தேதி வரை தொடா்புடைய ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள், நகராட்சி அலுவலகங்கள் மற்றும் ஊராட்சி அலுவலகங்கள் மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.

அக்டோபா் 23-ஆம் தேதி வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதால், இத்திட்டத்தில் பயனடைய விரும்பும் தகுதியானவா்கள் விண்ணபிக்கலாம். குறைந்தபட்சம் 8- ஆம் வகுப்பு படித்த,18 வயது முதல் 40 வயதுடைய பணிபுரியும் பெண்கள் விண்ணப்பிக்கலாம். தனிநபா் வருமானம் ஆண்டுக்கு ரூ. 2.5 லட்சத்துக்குள் இருக்க வேண்டும். ஓட்டுநா் உரிமம் அவசியம் பெற்றிருக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் தனது செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com