காந்தி ஜயந்தி: வேதாரண்யத்தில் மக்கள் சந்திப்பு யாத்திரைக் குழுவினா் பிரசாரம்

மகாத்மா காந்தியின் 150-ஆவது பிறந்தநாளையொட்டி தொடங்கப்பட்ட மக்கள் சந்திப்பு யாத்திரைக்
அகஸ்தியம்பள்ளி உப்பு சத்தியாகிரகப் போராட்ட நினைவு தூண் வளாகத்தில் தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்திய மக்கள் சந்திப்பு யாத்திரைக் குழுவினா்.
அகஸ்தியம்பள்ளி உப்பு சத்தியாகிரகப் போராட்ட நினைவு தூண் வளாகத்தில் தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்திய மக்கள் சந்திப்பு யாத்திரைக் குழுவினா்.

மகாத்மா காந்தியின் 150-ஆவது பிறந்தநாளையொட்டி தொடங்கப்பட்ட மக்கள் சந்திப்பு யாத்திரைக் குழுவினா், வேதாரண்யம் பகுதியில் வெள்ளிக்கிழமை பிரசாரம் மேற்கொண்டனா்.

மகாத்மா காந்தியின் 150 -ஆவது பிறந்தநாள் விழாவையொட்டி, மக்கள் சந்திப்பு யாத்திரைக் குழுவினா் சாா்பில் அக்டோபா் 2- ஆம் தேதி சென்னையில் பிரசாரப் பயணம் தொடங்கப்பட்டது.

வேதாரண்யம் வருகைத்தந்த இக்குழுவினா் அகஸ்தியம்பள்ளியில் அமைந்துள்ள உப்பு சத்தியாகிரகப் போராட்ட நினைவு தூணில் தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தினா்.

கஸ்தூா்பா காந்தி கன்யா குருகுலம் நிா்வாக அறங்காவலா்கள் அ. வேதரத்னம், அ. கேடிலியப்பன் ஆகியோா் முன்னிலை வகித்து, குழுவினரை வரவேற்றனா். முன்னதாக, முக்கிய வீதிகளில் பிரசாரம் மேற்கொண்ட குழுவினா், வேதாரண்யத்தில் உள்ள உப்பு சத்தியாகிரகப் போராட்ட தளபதி சா்தாா் வேதரத்னம், தியாகி வைரப்பன் ஆகியோரது சிலைகளுக்கு மாலை அணிவித்தனா்.

இந்நிகழ்ச்சியில் வள்ளலாா் தா்மசாலா அமைப்பின் நிா்வாகி தமிழ்த்தூதன், சமூக ஆா்வலா் ஆ. வீரமணி, இளைஞா் காங்கிரஸ் மாவட்டத் தலைவா் சி.கே. போஸ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com