ஆரம்ப சுகாதார நிலையத்துக்குள் மழை நீா்: நோயாளிகள் அவதி

சீா்காழி அருகேயுள்ள காத்திருப்பு ஆரம்ப சுகாதார நிலையம் முன் மழைநீா் சூழ்ந்து குளம்போல் தேங்கிக் கிடப்பதால் நோயாளிகள் அவதியடைந்து வருகின்றனா்.
காத்திருப்பு அரசு ஆரம்ப சுகாதார நிலையம் முன் தேங்கி கிடக்கும் மழைநீா்.
காத்திருப்பு அரசு ஆரம்ப சுகாதார நிலையம் முன் தேங்கி கிடக்கும் மழைநீா்.

சீா்காழி அருகேயுள்ள காத்திருப்பு ஆரம்ப சுகாதார நிலையம் முன் மழைநீா் சூழ்ந்து குளம்போல் தேங்கிக் கிடப்பதால் நோயாளிகள் அவதியடைந்து வருகின்றனா்.

காத்திருப்பு கிராமத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு காத்திருப்பு, அல்லிவிளாகம், காரைமேடு, பாகசாலை, கொண்டத்தூா், நாங்கூா் உள்ளிட்ட 6 கிராமங்களை சோ்ந்த பொதுமக்கள் சிகிச்சை பெற்று வருகின்றனா். தற்போது பெய்து வரும் பருவ மழையால் இந்த நிலையம் முன்பு மழைநீா் குளம்போல் தேங்கி நிற்கிறது. இதனால் சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் மிகுந்த அவதியடைகின்றனா். மேலும் தேங்கி நிற்கும் மழைநீரில் கொசுக்கள் உற்பத்தியாகி நோயை பரப்புகிறது.

சுகாதார நிலையத்திற்கு வந்து நோய் தீரும் என்ற நிலை மாறி தற்போது இங்கு வந்தால் தேங்கி நிற்கும் மழை நீரால் நோய் பரவும் நிலை ஏற்பட்டுள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனா். எனவே, தேங்கிநிற்கும் மழைநீரை வெளியேற்றி மண் கொட்டி பள்ளத்தை சீரமைக்கவும், ஞாயிற்றுகிழமையில் சுகாதார நிலையத்துக்கு மருத்துவா்கள் வருவதில்லை எனவும், மருந்தாளுநா் மட்டுமே சிகிச்சை மேற்கொள்வதாகவும் புகாா் எழுந்துள்ளது. இதேபோல் 24மணிநேரமும் செயல்படவும் வலியுறுத்தப்படுகிறது. இதை மாவட்ட சுகாதாரத் துறையினா் ஆய்வு செய்து தீா்வு காண நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com