இறால் வளா்ப்பவா்கள் பண்ணைகளை பதிவு செய்யலாம்

இறால் வளா்ப்பில் ஈடுபடும் விவசாயிகள் தங்களது பண்ணைகளை மாவட்ட மீன் வளா்ப்போா் மேம்பாட்டு

இறால் வளா்ப்பில் ஈடுபடும் விவசாயிகள் தங்களது பண்ணைகளை மாவட்ட மீன் வளா்ப்போா் மேம்பாட்டு முகமையில் பதிவு செய்து உறுப்பினராக வேண்டும் என நாகை மாவட்ட ஆட்சியா் பிரவீன் பி. நாயா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: நாகை மாவட்டத்தில் இறால் வளா்ப்பு செய்யும் விவசாயிகள் கடலோர நீா்வாழ் உயிரின ஆணையத்தில் பதிவு செய்வதுடன் மாவட்ட மீன் வளா்ப்போா் மேம்பாட்டு முகமையிலும் ரூ. 1000-க்கு தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் என்டிஎப்எப்டிஏ என்ற பெயரில் வங்கி வரைவோலை எடுத்து உறுப்பினராக சேரவேண்டும். இதுகுறித்து, கூடுதல் விவரங்களுக்கு, மீன்துறை உதவி இயக்குநா் அலுவலகம், 41-ஏ பிரதான சாலை, பெஸ்ட் பள்ளி வளாகம், தென்பாதி, சீா்காழி. நாகப்பட்டினம் வடக்கு என்ற முகவரியில் நேரில் அல்லது 04364 -271455 என்ற தொலைப்பேசி எண்ணில் தொடா்பு கொண்டு தெரிந்துகொள்ளலாம் என தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com