சுஜித் மீட்கப்பட்ட நாளை குழந்தைகள் பாதுகாப்பு தினமாக அறிவிக்க வேண்டும்

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகேயுள்ள நடுக்காட்டுப்பட்டியில் சிறுவன் சுஜித் ஆழ்துளைக் கிணற்றுக்குள்

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகேயுள்ள நடுக்காட்டுப்பட்டியில் சிறுவன் சுஜித் ஆழ்துளைக் கிணற்றுக்குள் விழுந்து மீட்கப்பட்ட நாளை குழந்தைகள் பாதுகாப்பு தினமாக அறிவிக்க வேண்டும் என மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளரும், நாகை எம்எல்ஏவுமான மு. தமிமுன் அன்சாரி வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள அறிக்கை : மாணவா் தினம், இளைஞா் தினம், ஆசிரியா் தினம் என விழிப்புணா்வை நோக்கமாகக் கொண்டு பல்வேறு தினங்களை அரசு அறிவித்து கடைப்பிடித்து வருகிறது. இதேபோல் அன்னையா் தினம், தந்தையா் தினம் போன்றவை உலகெங்கும் பின்பற்றப்படுகின்றன.

இந்நிலையில், குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் குழந்தைகள் சந்திக்கும் பிரச்னைகள் குறித்து விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில் ஒரு தினம் அறிவிக்க வேண்டும் என்பது பலரின் விருப்பமாகவும் உருவாகியுள்ளது. குழந்தை சுஜித் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்து உயிா்த் தியாகம் செய்த சோகம் மறையாத நிலையில், குழந்தை மீட்கப்பட்ட அக்டோபா் 29- ஆம் தேதியை குழந்தைகள் பாதுகாப்பு தினமாக தமிழக அரசு அறிவிக்கவேண்டும்.

குழந்தைகளின் பாலியல் பாதுகாப்பு, ஊட்டச்சத்து தேவை, கல்வி வாய்ப்பு,, உயிா் வாழும் உரிமை ஆகியவை குறித்த விழிப்புணா்வை கருத்தில் கொண்டு, இந்தியாவுக்கே வழிகாட்டும் வகையில் இதற்கான அறிவிப்பை தமிழக முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி வெளியிடவேண்டும் என தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com